கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரைக் கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக, ஷோலூர் மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதனையடுத்து, இது தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசன், சுதாகரன் ஆகியோரையும்,

நீலகிரி முன்னாள் மாவட்ட ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்பி முரளி, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், அதிமுக நிர்வாகி சஞ்சீவன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ஆனால்,கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

[su_image_carousel source=”media: 25839,25840″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்க இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சயானிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அந்த விசாரணை அறிக்கை ஆகஸ்ட் 27 அன்று நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்ய உள்ளனர். எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கு அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கொடநாடு வழக்கு மறுவிசாரணை: பதற்றத்தில் போராட்டத்தில் குதித்த எடப்பாடி பழனிசாமி!