டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிவரும் செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் தினமும் சராசரியாக 2,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு டெல்லியில் இதுவரை 10,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதில் மருத்துவத்துறையினர் அளப்பறிய பணி செய்துவருகின்றனர். அதிலும், குறிப்பாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் சம்பள பிரச்சனை உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

6-வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும் உள்பட பல கோரிக்கையுடன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செவிலியர்களின் வேலைநிறுத்தத்தால் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள் மற்றும் புற நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

கொரோனா கிளஸ்டராக மாறிய சென்னை ஐஐடி; இதுவரை 104 பேர் பாதிப்பு