சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ரியோ ராஜ் மற்றும் நட்சத்திரா நடிப்பில் உருவாகி வரும் “காதல் ஒன்று கண்டேன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சரவணன் மீனாட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் ரியோ. இவர் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ மற்றும் இவர் நடித்த சீரியல் ஆகியவற்றில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரோடக்‌ஷன்ஸ் மூலம் உருவாக இருக்கும் புதிய படத்தில் ரியோ ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்டது. இப்படத்தில், அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் நடிக்கிறார்.

இந்நிலையில், ரியோ ஹீரோவாக நடிக்கும் மற்றொரு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘காதல் ஒன்று கண்டேன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை நட்சத்திரா, அஸ்வின் குமார், நாகேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இயக்குனர் புனித் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.