கர்நாடக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு சில மணிநேரம் முன்னதாக காங்கிரள் கட்சி வெளியிட்ட ஆடியோப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அதில் தலா ரூ.10 கோடி விதம் மொத்தம் ரூ.200 கோடி என 18 எம்எல்ஏ-க்களிடமும், பாஜக எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யாமலிருக்க பேரவைத் தலைவருக்கு ரூ.50 கோடியும், மேலும் பதவி விலகும் எம்எல்ஏ-க்களுக்கு தேர்தல் செலவும் வழங்கப்படும் என்று பேரம் பேசப்பட்டிருந்தது.
 
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோரின் பெயர்களும் இதில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
 
இந்நிலையில் இந்த ஆடியோ பதிவில் இடம்பெற்றிருந்தது, கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மாநிலத் தலைவருமான எடியூரப்பாவின் குரலாகும். எனவே இச்சம்பவம் கர்நாடகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து கர்நாடக மூத்த காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:
 
ஒவ்வொரு எம்எல்ஏ-க்களிடமும் எடியூரப்பா ரூ.10 கோடி பேரம் பேசப்படுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த பேரம் தொடர்பான பேச்சுவார்த்தையில் 18 எம்எல்ஏ-க்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. எனவே இதில் ரூ.200 கோடி வரை பேரம் பேசப்பட்டிருக்கலாம்.
 
அதுமட்டுமல்லாமல் 12 எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 6 பேருக்கு வெவ்வேறு துறைகளில் தலைவர் பதவி வழங்கப்படும் என்ற அதில் பேசியிருப்பதாக தெரிவித்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு வந்தாலும் நீதிபதி மூலம் சரி காட்டி விடலாம் என பாஜகவினர் பேசி யுள்ளது பெரும் அதிர்ச்சியை எற்ப்படுத்தி உள்ளது..