உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள “கண்ணே கலைமானே” படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

‘தென்மேற்கு பருவகாற்று’ படத்தில் விஜய் சேதுபதியை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சீனு ராமசாமி. மீண்டும் இவர் விஜய் சேதுபதியை வைத்து ‘மாமனிதன்’ படத்தையும் எடுத்து வருகிறார். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைய்த்து தயாரித்துள்ளார். மாமனிதன் படப்பிடிப்பு தேனியில் பரபரப்பாகப் நடக்கிறது.

இந்நிலையில், சீனு ராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கண்ணே கலைமானே படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. வடிக்கரசி, தமன்னா, வசுந்தரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார்.

விவசாய நிலத்தை காப்பாற்ற போராடும் இளம் விவசாயியை பற்றிய பின்னணியில் கண்ணே கலைமானே படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கிராம மண்வாசனையுடன் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் பார்த்து முடித்தவுடன் நெகிழ்ச்சியுடன் சீனு ராமசாமியைக் கட்டிப்பிடித்து, விஜய்சேதுபதி கண் கலங்கி உள்ளார். தவிர, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்தரசனும் படம் பார்த்துவிட்டு இயக்குநர் சீனு ராமசாமியைப் பாராட்டியுள்ளார்.