‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம்பெற்ற பிரியா வாரியரின் கண் அசைவு பிரபலமடைந்ததை தொடர்ந்து தற்போது அவரது டாட்டூவும் தற்போது வைரலாகிவருகிறது.

ஒரே பாடலில் கண்ணடித்து உலகம் முழுவதும் பிரபலம் ஆனவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவர் நடித்த ஒரு அடார் லவ் படம் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் திரைக்குவர உள்ளது. தமிழில் கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை வெளியிடுகிறார்.

பிரியா வாரியரின் கண்ணசைவு வைரலாகி வருவதை தொடர்ந்து மார்பில் அவர் குத்தி இருக்கும் டாட்டூவும் பிரபலம் அடைந்துள்ளது. “கார்ப் டயம்” என்று லத்தீன் மொழியில் டாட்டூ எழுதப்பட்டுள்ளது. ‘எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் இந்த நொடியை அனுபவித்து வாழுங்கள்’ என்பது அதன் அர்த்தம்.

முன்னதாக, இந்தியில் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற படத்திலும் பிரியா வாரியர் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைலரில் குளியல் தொட்டியில் நடிகையின் கால்கள் மட்டும் தெரிவது போன்ற காட்சி இருந்தது. இது நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் இறந்து கிடந்ததை நினைவூட்டுகிறது என்று கூறி அவரின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் அப்படக்குழுவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

படத்தின் இயக்குனர் பிரசாந்த், போனி கபூருக்கு அளித்துள்ள விளக்கத்தில், ஸ்ரீதேவி பங்களா படத்திற்கும் நடிகை ஸ்ரீதேவிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஸ்ரீதேவி என்பது சாதாரண பெயர் என்று பிரசாந்த் தெரிவித்துள்ளார். ஆனால் பிரசாந்தின் விளக்கத்தை ஏற்க போனி கபூர் தயாராக இல்லை. இப்படத்தை போனி கபூர் ரிலீஸ் செய்ய விட மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.