கடந்த ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் 2019 யுபிஎஸ்சி (UPSC) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் இந்திய முழுவதும் 829 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழக இளைஞர் கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூர் கிராமத்தை சேர்ந்த முந்திரி விவசாயி ராமநாதன் மகள் ஐஸ்வர்யா, தமிழக அளவில் 2வது இடத்தையும், அகில இந்திய அளவில் 47வது இடத்தையும் பெற்றுள்ளார்.

மேலும், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பண்டரகோட்டை கிராமத்தை சேர்ந்த சிவபிரகாசம் என்பவரது மகள் பிரியங்கா தமிழக அளவில் 3வது இடத்தையும், அகில இந்திய அளவில் 68வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

[su_image_carousel source=”media: 16427,16428″ crop=”none” columns=”2″ autoplay=”2″ image_size=”medium_large”]

மேலும் காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருஜன் ஜெய், இந்திய அளவில் 75வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஸ்ருஜன் ஜெய் முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த சம்பத் மகள் கிருஷ்ணபிரியாவும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவர், அகில இந்திய அளவில் 514வது இடம் பிடித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி சதாசிவம்- சிவகாமி. இவர்களது மகள் அபிநயா டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று, ராமநாதபுரத்தில் இருக்கும் பரமக்குடி வேளாண்மை அலுவலகத்தில் வேளாண் அலுவலராக பணிக்குச் சேர்ந்தார். நேற்று வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் 559வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

[su_image_carousel source=”media: 16429,16430″ crop=”none” columns=”2″ autoplay=”2″ image_size=”medium_large”]

மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள மணிநகரம் பகுதியை சேர்ந்த முருகேசன்- ஆவுடைதேவி தம்பதியினரின் மகளான பூரண சுந்தரி தேர்வு பெற்றுள்ளார். இவர் 5 வயதில் பார்வை நரம்பு சுருங்கியதால் தனது பார்வையை முழுமையாக இழந்த மாற்றுத்திறனாளியான பூரண சுந்தரி, உடல் குறைபாடுகளை முயற்சிகளால் முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையை மெய்பிக்கும் மனிதர்களின் வரிசையில் இணைந்துள்ளார்.