இணையதளத்தில் பதிவேற்றப்படும் செய்திகள், நிகழ்ச்சிகள், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற பட ஊடகங்கள் அனைத்தையும் மத்திய அரசின் தகவல் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா காலத்தில் ஓடிடியில் திரைப்படங்கள் வெளியிடுவது அதிகரித்துள்ளது. திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்கள் தணிக்கை செய்யப்படுகிறது. ஆனால், ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் திரைப்படத்திற்கு தணிக்கை அவசியம் இல்லை என்ற நிலை உள்ளது.

குறிப்பாக நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், ஜி5, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெப் சீரிஸ் அதிகமாக வெளியிடப்படுகிறது. அவற்றில் வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதால் ஓடிடி தளங்களுக்கு தணிக்கை உட்படுத்த வேண்டும் என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய தகவல் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகம், ஓடிடி இயங்கு தளங்கள், டிஜிட்டல் செய்தி தளங்கள் ஆகியவை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாணை பிறப்பித்துள்ளது.

இதன்மூலம், ஓடிடி தளங்களுக்கான கொள்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரத்தை அமைச்சகம் பெறுவதாகவும், இந்த புதிய நடவடிக்கை குறித்து ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மேலும், இதற்கான வழிக்காட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 வாரங்கள் மட்டும் புதிய திரைப்படங்கள் திரையிடப்படும்- பாரதிராஜா திட்டவட்டம்