17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுகள் 18 மாவட்டங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு (வியாழக்கிழமை) நடைபெற்றது.

ஒடிஷாவில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலும் நடைபெறுகிறது. அதற்கான முதற்கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.

ஒடிஷாவில் மொத்தம் 21 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. அங்கு 4 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதற்கட்டமாக 4 தொகுதிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது.

ஆனால், அம்மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தின் சித்ரகொண்டா பகுதியில் உள்ள 6 வாக்குச்சாவடிகளில் நக்ஸல் அச்சுறுத்தல் காரணமாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இதனை அம்மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

முன்னதாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் செவ்வாய்கிழமை மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாஜக எம்எல்ஏ ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 

இதையடுத்து, ஒடிஷா மாநிலத்தில் நக்ஸல் அச்சுறுத்தல் உள்ள மாவட்டங்களான மல்காங்க்ரி, கோராபுட், ராயகடா ஆகிய மாவட்டங்களுக்கு அம்மாநில டிஜிபி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

காவலாளி ( சவுக்கிதார்) என்று தன்னை அறிவித்து கொள்ளும் மோடி , மற்றும் பாஜக, ஆர் எஸ் எஸ் அமைப்பினர் நடத்தும் 5 ஆண்டு ஆட்சியின்  முடிவிலும் கூட  6 வாக்கு சாவடியில் ( சும்மர் 9000 ஓட்டுகள்) ஒரு ஓட்டு கூட விழாதது வருத்ததை தருவதாக நெட்டிச்னஸ் பதிவி செய்து வருகினறனர்