சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகளுக்கிடையேயான போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஐபிஎல் டி20 2021 கிரிக்கெட்டின் 44வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் முயற்சிக்கு பின் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியின் தொடக்க பேட்ஸ்மேன் அதிகபட்சமாக சாகா 46 பந்தில் 44 ரன்கள் எடுத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 135 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ருதுராஜ், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 10.1 ஓவரில் 75 ரன்கள் சேர்த்தனர்.

[su_image_carousel source=”media: 26718,26719″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

ருதுராஜ் 38 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயீன் அலி 17 பந்தில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரெய்னா 2 ரன்னில் வெளியேற, டு பிளிஸ்சிஸ் 36 பந்தில் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார். டு பிளிஸ்சிஸ் ஆட்டமிழக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 15.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது.

5வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் எம்.எஸ்.தோனி ஜோடி சேர்ந்தார். கடைசி 3 ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. 18வது ஓவரின் 4வது பந்தில் டோனி கொடுத்த கடினமான கேட்சை ஜேசன் ராய் பிடிக்க தவறினார். இதனால் டோனி 2 ரன்னில் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பினார். அடுத்த பந்தை அம்பதி ராயுடு பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது.

கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டநிலையில், கடைசி ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். 4வது பந்தை தோனி சிக்சருக்கு தூக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அரை இறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.