பிகார், சிக்கிம், ஹரியாணா, மேகாலயா, திரிபுரா, ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட் உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

பிகார் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிகார் மாநிலத்துக்கு புதிய ஆளுநராக லால்ஜி தாண்டன் நியமிக்கப்பட்டார்.

ஹரியாணா மாநிலத்துக்கு சத்யதேவ் நாராயண் ஆர்யா, உத்தரகண்ட் மாநிலத்துக்கு பேபி ராணி மௌரியா, சிக்கிம் மாநிலத்துக்கு கங்கா பிரசாத், மேகாலயா மாநிலத்துக்கு தத்தகட்டா ராய் மற்றும் திரிபுரா மாநிலத்துக்கு கப்தன் சிங் சோலாங்கி ஆகியோர் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.

தேரத்லை முன்னிட்டு பாஜக அரசு 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மாற்றி உள்ளது பரபரப்பாகியுள்ளது . இந்த மாற்றல் காரணம் பற்றி அரசுன் மவுனமாக இருப்பினும் தேர்தல் வரும் காலத்தில் தோதாக கட்சிகள் எடுக்கும் நடவடிக்கை தான் இதுவே என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் ..