பணிபுரியும் காலத்திலே நேர்மையாக செயல்பட்டதால் இரண்டு முறை குடியரசு விருது பெற்றவர். லஞ்ச ஒழிப்புத் துறையில் யார் மிரட்டலுக்கும் அடிபணியாமல் செயல்பட்டதால் ஆளுநர் விருது வாங்கியவர்..

1961 ஆண்டு உதவி ஆய்வாளராக காவல் பணியில் சேர்ந்து படிப்படியாக எஸ்பி பதவிக்கு வந்தவர்.. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணை அதிகாரியாகவும் செயலாற்றியவர்.

தமிழக அரசால் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி 1997 முதல் 2015ஆம் ஆண்டு வரை, மறைந்த #அதிமுக முதல்வர் ஜெயலலிதா மீதான #சொத்துக்குவிப்பு வழக்கில் முதன்மை விசாரணை அதிகாரி..

அந்தப் பதினெட்டு ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சி செய்தது 10 வருடம் என்பது அதிமுக்கியமானது.. இந்த காலகட்டத்தில் அதிமுக அரசால் பல தொல்லைகளுக்கு ஆளானார்..

ரிட்டையர் ஆன பின்னர் அவர் அளித்த ஒரு பேட்டியில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரிடம் விசாரணைக்காக சென்றபோது ஜெயலலிதா அவரிடம் தாட்பூட் என ஆங்கிலத்தில் கத்தி குதித்ததாக சொன்னார்..

யாருமே #லஞ்சம் வாங்கவில்லையா யாருமே #ஊழல் செய்யவில்லையா என்னை மட்டுமே ஏன் டார்கெட் செய்கிறீர்கள் என்று கத்திய ஜெயலலிதாவிடம், அப்போது அவர் அமைதியாக அரசு அதிகாரியாக யார் ஊழல் செய்தாலும் விசாரிக்க வேண்டியது என் பொறுப்பு cooperate செய்யுங்கள் என அவர் சொல்லியபோது வேறு வழி இல்லாமல் பூனையாக மாறி அமைதியாக ஜெயலலிதா விசாரணைக்கு ஒத்துழைத்ததாக அவர் தெரிவித்தார்..

ஜெயலலிதா மக்கள் வரிப்பணத்தில் சுரண்டி ஊழல் செய்து சொத்து குவித்த வழக்கில் நீதிமன்றத்தில் நீதிபதிகள் இவரின் விசாரணையை அதன் மூலம் பெறப்பட்ட தகவல்களை பாராட்டியுள்ளதும் நடந்தது..

நேற்று இயற்கை மூப்பு காரணமாக தனது 83 வயதில் மரணத்தை தழுவியுள்ளார் அமைதியாக.. நிம்மதியான நிரந்தர தூக்கம்.. இவரைப் போன்ற அதிகாரிகள் ஒவ்வொரு நாட்டுக்கும் கிட்டுமென்றால் அந்த நாட்டில் லஞ்ச லாவண்யம் நிகழ்த்தும் ஆவலுள்ள நேர்மையற்றவர்கள் முக்கியமாக அரசியல்வாதிகள் அதிகார திமிர் குறையும்..
வாழ்க நல்லம நாயுடு.. வளர்க அவரின் புகழ்..

https://www.facebook.com/savenra/posts/7362921357067057