உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இளையராஜாவை அவமதிப்பதா? இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லை என்றால் விமர்சிப்பதா? இதுதான் ஜனநாயகமா? என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடியை அம்பேத்கருக்கு இணையாக ஒப்பிட்டு முன்னுரை எழுதியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.

இந்த முன்னுரையில் பிரதமர் மோடியை புகழ்ந்து உள்ள இளையராஜா, மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்.

நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளை பாதுகாப்போம்- பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், முத்தலாக் சட்டம் மூலம் பெண்களை முன்னேற்றி இருக்கிறார் மோடி என்று இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜாவின் இந்த கருத்துக்கு, சமூக வலைதளங்களில் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் பாஜக தலைவர்கள் இளையராஜாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அம்பேதக்ருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்ட விவகாரத்தில், இளையராஜாவிற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இளையராஜாவை அவமதிப்பதா? இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லை என்றால் விமர்சிப்பதா? இதுதான் ஜனநாயகமா?

ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் எதிரான கருத்தை தெரிவித்தால் எதிர்ப்பதா? ஆதரவாக பேசவில்லை என்பதால் அவரை விமர்சிப்பது தவறான அணுகுமுறை.

கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜகவினர் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு புகழ்ந்த இளையராஜா குறித்து சவெராவின் கருத்துக்கள் சமூக வலைதளங்கில் காண: https://www.facebook.com/savenra/posts/8251642344861616