‘800’ பட சர்ச்சை விவகாரத்தில் இலங்கையில் பிறந்தது எனது தவறா என கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.

800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து கொண்டிருக்கிறார். ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர் முத்தையா முரளிதரன், எனவே அவர் குறித்து படத்தில் நடிக்கக் கூடாது என தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள். #ShameOnVijaySethupathi என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டானது.

இதையடுத்து இந்த படத்தில் நடிப்பதா வேண்டாமா என்பது குறித்து இன்னும் ஓரிரு நாளில் விஜய் சேதுபதி அறிவிப்பார் என தெரிகிறது. இந்நிலையில் இதுகுறித்து முத்தையா முரளிதரன் நீண்ட விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறுகையில் இதுநாள் வரை நான் என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன். அது விளையாட்டானாலும் சரி,தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகிறேன்.

மேலும் வாசிக்க: ‘800’ படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு வலுக்கும் எதிர்ப்புகள்