புல்வாமா தீவிரவதாக தாக்குதல் விவகாரத்தில் இந்தியா- பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுங்கள் என்று ஐ.நா பொது செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
 
தீவிரவதாக தாக்குதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இந்தியாவும் பாகிஸதானும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
இந்தியா- பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் கேட்டுக்கொண்டால் இந்த விவகாரத்தில் தலையிட பொது செயலர் தயாராக உள்ளார் என்று புல்வாமா தீவிரவதாக தாக்குதல் தொடர்பாக ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
 
மேலும் பாகிஸ்தான் தரப்பு பொது செயலரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எங்களுக்கு எதுவும் வரவில்லை என்றார் ஆன்டோனியோ குட்ரெஸ்.
 
இதனை தொடர்ந்து காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
 
மேலும் புல்வாமா தீவிரவதாக தாக்குதலில் உயிர் இழந்த வீரர்களின் குடும்பத்துக்கும், இந்திய மக்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் என ஐ.நா பொது செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.