சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள விஜய கமலேஷ் தஹில் ரமணியின் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெற்றது.

இவ்விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முதல் வரிசைகளில் அமரவைக்கப்பட வேண்டும் என்பது தான் மரபு ஆகும். புரோட்டாக்கால் எனப்படும் அரசியலமைப்புப் படிநிலை வரிசையும் இதையே வலியுறுத்துகிறது.

ஆனால், இந்த விழாவில் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முதல் வரிசைகளில் அமர வைக்கப்பட்டதுடன், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏதோ மூன்றாம் தர மனிதர்களைப் போல பின்வரிசைகளுக்கு தள்ளப்பட்டனர். நீதியரசர்கள் அமருவதற்கு முறையான வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.

இதனால் மனவருத்ததில் இருந்த நீதிபதிகள் இன்று ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தது பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது .

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்ப்பில் மற்ற நீதிபதிகளுக்கு முன்வரிசையில் இடமளிக்காமல் அவமதித்ததை தொடர்ந்து இந்த புறக்கணிப்பு என்பதால் இது அரசுக்கும் நீதிதுறைக்கும் உள்ள பனிபோரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்

தொடர்பு செய்தி : அதிமுக அரசு நீதிபதிகளுக்கு முன்வரிசையில் இடமளிக்காமல்