அமெரிக்காவின் தென்கிழக்கில் கடற்கறையை ஒட்டி அமைந்துள்ள அலபாமா அழகிய இயற்கை எழில் கொஞ்சும் மாகாணம் . இந்த மாகாணம் சுற்றுலா பயணிகளின் ஆதர்ச இடங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
 
விமான பைலட் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர் ஒருவர், சிறிய ரக விமானத்தை எடுத்துக்கொண்டு வானில் பறந்துள்ளார். 
 
அந்த நேரத்தில்  அப்போது அலபாமா தேசிய நெடுஞ்சாலையின் மேல் சென்ற விமானம் திடீரென நெடுஞ்சாலையில் தரை இறங்க, சாலையில் சென்ற பயணிகள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
 
இதை நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த ஓர் தம்பதி காரை விமானம் அருகே நிறுத்தி விமானத்தை வீடியோ படம் எடுத்தனர்.
 
விமானி எதற்காக விமானத்தை சாலையில் தரைஇறக்கினார் எனத் தெரியாமல் அவர்கள் படம் எடுத்துக்கொண்டிருக்கவே, விமானி அவசரமாக விமானத்தில் இருந்து இறங்கிவந்து சாலையோரத்துக்குச் சென்று சிறுநீர் கழித்தார். 
 
அப்போது தான்  பறந்து கொண்டிருந்த விமானத்தை, ரோட்டில் நிறுத்திய காரணம்  புரிய இதுவும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
 
வடிவேல் பட பாணியில் நடைப்பெற்ற இந்த சம்பவம் ., சென்ற  விமானியின் புகைப்படம் மற்றம்  அவர் அடக்க முடியாமல் செய்த காரியமும் பலரை சிரிக்க வைத்து அது சமூக தளத்தில் வைரலாகி வருகிறது.