ஆர்கிடெக்ட் அன்வய் நாயக் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

2018ம் ஆண்டு ஆர்கிடெக்ட் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்டனர். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமியை, கடந்த 4ம் தேதி மும்பை காவல்துறை கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அர்னாப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

பின்னர் தலேஜா மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அர்னாப் கோஸ்வாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கவும் மும்பை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதனையடுத்து அர்னாப் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் சந்திரசூட், இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அவசர வழக்காக இன்று (நவம்பர் 11) விசாரிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, 50 ஆயிரம் பிணை தொகை விதித்த நீதிபதிகள், அர்னாப் உள்ளிட்ட 3 பேருக்கும் எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், ஒருவருடைய கருத்தில் நமக்கு வேறுபாடுகள் இருந்தாலும் தனி மனித சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அர்னாப்பை ஜானினில் விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க மறுத்த மும்பை உயர் நீதிமன்றம்