பாஜக தேசிய செயலாளர் போலீஸார் மற்றும் நீதிமன்றதை பேசியதை தொடர்ந்து சென்னை வள்ளுவர் கோட்டம் ஆர்ப்பாட்டத்தின் போது போலீஸார் மற்றும் முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசிய அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆன கருணாஸ் மீதும் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், பங்கேற்ற கருணாஸ் எம்எல்ஏ சர்ச்சைக்குரிய முறையில் போலீஸார் மற்றும் முதல்வர் குறித்து அவதூறாக பேசினார். அதன் விடியோ சமூக வலைதளங்களிலும், செய்திகளிலும் வெளிவந்தன.

இதையடுத்து, யூடியூப்பில் வெளிவந்த காட்சியின் அடிப்படையில் கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீஸார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, கருணாஸின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், கருணாஸ் பேசியது முதல்வரின் கவனத்திற்கு சென்றுள்ளது. சட்டத்தை மீறி யார் பேசினாலும் அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். கருணாஸ் பேசியதற்கான பலனை அவர் அனுபவித்தே ஆக வேண்டும்” என்றார்.

அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆன கருணாஸ் என்ன தான் பேசினார் பேசிய பேச்சின் மொத்த விவரம் அறிய கிழே படிக்கவும்

” இப்ப ஒன்று இரண்டு பேர் சமீபகாலமாக தப்பு செய்கிறார்கள். அதையும் நான் பொதுச் செயலாளரிடம் சொல்லிவிட்டேன். நீ கொலை கூட பண்ணு. சொல்லிட்டு பண்ணு. அதில் நியாயம் இருக்கணும். உன்னை வாழ விடலையா. தொந்தரவு பண்ணுகிறானா. அப்போ கோபம் வரத்தானே செய்யும். கூட்டத்தில் ஒரு ஆளை 10 பேர் கல்ல விட்டுட்டு வர்றது. அது வேற ஆளுதான் பண்ணுவாங்க. நாம அப்படி பண்ணக்கூடாது. யார்றா அடிச்சா கல்லால அப்படின்னு கேட்கும் போது நான் தான் அடிச்சேன்னு சொல்லனும்.

முதல்வர் வருவார் மரியாதை கொடுக்கனும்னு நின்னுக்கிட்டு இருந்தா 100 போலீச போடுறாங்க என் பந்தல்ல. என்னயா எதுக்குயா இங்க வந்து நிக்கிறீங்கன்னு கேட்டா. நீங்க வந்து முதல்வரை மறிக்க போறீங்களாம். அடிக்க போறீங்களாம்.. முதல்வரே நான் அடிப்பேன்னு பயப்படுகிறார். நான் பொய்யெல்லாம் சொல்லல. நீங்களே போன் பண்ணி கருணாஸ் இப்படி சொல்றாரே என்று கேளுங்க. அது தான் உண்மை. எடப்பாடி அரசாங்கத்துகிட்ட நாம என்ன சொன்னோம். கூவத்தூரில் இந்த கருணாஸ் இல்லாமயா இந்த அரசாங்கம் உருவாகிச்சு. கூவத்தூர் இடத்தை காட்டினது இந்த கருணாஸ். அதை மறுக்க முடியுமா?. சாமி படம், சூர்யா படம், சிங்கம் படத்தையெல்லாம் பார்த்துட்டு டைட்டா சட்டை போட்டுகிட்டு கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு இரண்டு மூன்று போலீஸ் அதிகாரிங்க இருக்காங்க. அவங்ககிட்ட மேல் அதிகாரிகள் அறிவுரை சொல்லனும்.

தம்பி இங்க வா நீ வந்து பப்ளிக் சர்வண்ட். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிற தொழிலாளி. முதல்ல மக்களை மதிக்க கத்துக்கோங்க. ரவுடி பசங்க மாதிரி கூலிங் கிளாஸ் போட்டுகிட்டு பின்னாடி ரவுடி மாதிரி பத்து பேரை வச்சுகிட்டு சுத்துனா மனதில் என்ன ஜமீன்தார் என்று நினைப்பா.. இல்ல குறுநில மன்னர்னு நினைப்பா.சாலிகிராமத்தில் தான் நாங்க சாவோம். சாலி கிராமம் எங்க ஊர். எங்க வீடு. நீ இன்னைக்கு வருவ நாளைக்கு போவ. சின்ன பய வயசு கம்மி. நல்ல ஆளு தமிழ்காரர். நல்லா வரனும்னு நாங்க நினைக்கிறோம். நீ பேட்டில, கத்தியை காட்டி காசு கேக்குறோம்னு சொல்ற. ஒரு நாளைக்கு சரக்கு ஒரு லட்சம் செலவு பண்றோம். வர்றவன் போறவனுக்கு பிரியாணி ஆக்கி போடுதற்கு அவ்வளவு செலவு பண்றோம். அது எங்க பாரம்பரியம். நாங்க சாமிக்கே சாராய பாட்டில் வைத்து சாமி கும்பிடுகிறவங்க. ஐபிஎஸ் படித்த படிப்புக்கே களங்கம் விளைவிக்கக்கூடிய கீழ்த்தரமான ஒரு செயலை செய்தவர் இந்த டிசி அரவிந்த்.

நான் அன்னைக்கே அவர் டவுசர கழட்டிருப்பேன். அவர் மேல நடவடிக்கை எடுப்பதை வேண்டாம் என்று சொன்னவன். ஒரு நல்ல அதிகாரி. நேர்மையான அதிகாரி என்று சொல்றாங்க. என்ன ஈகோ. நானா நீயான்னு போட்டு பார்க்கலாம் அப்படிங்கிற மாதிரி பார்க்கிறீங்களா. காக்கிச் சட்டையை கழட்டி வைச்சுட்டு வாங்க பார்ப்போம். நீயா நானான்னு பார்த்துக்கிறேன். அந்த அதிகாரம் தானே உங்களை இப்படி பண்ண வைக்கிறது. அந்த திமிர் தானே உங்களை இப்படி பண்ண வைக்கிறது. ஒருத்தர் செய்த தப்பு. எவ்வளவு செலவு தெரியுமா இதுக்கு. உன்னோட மாச சம்பளம் எவ்வளவு. இந்த கூட்டத்துக்கே எனக்கு 10 லட்சம் செலவு. இப்படி ஒவ்வொரு வாட்டியும் 10 லட்சம்னு நான் செலவு பண்ணிக்கிட்டிருக்க முடியுமா? அப்ப நான் இந்த 10 லட்சத்த வேற மாதிரி தான் செலவு பண்ண வேண்டும்”

இவ்வாறு அவர் பேசினார்.