அசாமில் இன்று ஏற்பட்ட தொடர் நிலச்சரிவில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தெற்கு அசாமில் உள்ள பராக் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காச்சர், ஹெய்ல்கண்டி, கரீம்கஞ்ச் மாவட்டங்களைச் சேர்ந்த 20 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இந்த மாவட்டங்களில் ஏற்கெனவே வெள்ளத்தால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நல்பரி, கோல்பாரா, நாகான், ஹோஜாய், மேற்கு கர்பி அங்லாங், திப்ருகார் மற்றும் டின்சுகியா மாவட்டங்களின் 356 கிராமங்களில் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு குறித்து அறிந்ததும் மாநில பேரிடர் மீட்புப்படையினர், தீயணைப்பு படையினர் 3 இடங்களுக்கும் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

[su_image_carousel source=”media: 14412,14413″ crop=”2:1″ autoplay=”2″ image_size=”medium”]

நிலச்சரி்வு குறித்து அறிந்த முதல்வர் சர்பானந்த சோனாவால், உயிிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வெளியிட்ட செய்தியில், “பாரக் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்தது ஆழ்ந்த வேதனையைத் தருகிறது. காச்சர், ஹெய்ல்கண்டி, கரீம்கஞ்ச் மாவட்ட நிர்வாகம் துரிதமாக மீட்புப்பணியை மேற்கொள்ள உத்தரவி்ட்டுள்ளேன்.

அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மருத்துவ சிகி்ச்சையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவி்ட்டுள்ளேன். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களி்ன் குடும்பத்தாருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: இந்தியாவில் சமூக பரவலாக மாறிய கொரோனா… மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்