இந்த 2 மாதங்களில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, அதன் சிஇஓ ராம்நாத் கூறியுள்ளார்.
 
ஆனால் அவர் கூறிய 24மணி நேரத்த்தில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்று அறிவித்ததோடு, ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
 
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா பாபு என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 
அப்போது அவர்கள் பிறப்பித்த உத்தரவில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. ஜனவரி 21-ந்தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும், ஜனவரி 21-ல் தலைமை செயலாளர், வேதாந்தா நிறுவன குழும இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.