மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சார்பில் இன்று டெல்லியின் பல்வேறு எல்லைகளில் 2,500 டிராக்டர்கள் மூலம் பேரணி ஊர்வலம் நடத்தினர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 43 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிர் மற்றும் மழையிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய அமைப்புகளுடன் 7 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே வேளாண் சட்டங்களை திரும்ப பெறப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால், விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

[su_image_carousel source=”media: 21168,21169,21170″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

நாளை (ஜனவரி 08) 8வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால், ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் குடியரசு தின விழா நடக்கும்போது, அதில் நடக்கும் வாகன அணிவகுப்பு முடிந்தபின், டெல்லி ராஜபாதையை நோக்கி விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத்தினர் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், டிராக்டர் பேரணி போராட்டத்திற்க்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. டெல்லியில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது. முதலில் காசிபூர் எல்லையில் டிராக்டர் பேரணியை தொடங்கினர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 2500 டிராக்டர்கள் பேரணி ஒத்திகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

போராடும் விவசாயிகளை அகற்ற கோரிய வழக்கு ஜனவரி 11ல் விசாரணை- உச்சநீதிமன்றம்