‘சாமி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சாமி ஸ்கொயர்’. இந்தப்படத்தில் முதன் முறையாக விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் இன்னொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ், காமெடி நடிகர் சூரி, பிரபு, ஜான் விஜய், இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர். படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் வெள்ளியன்று திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் ஜே.டி & ஜெர்ரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் தற்போது ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். சி.சி.டிவி கேமராவின் விழிப்புணர்வு சம்மந்தமாக தயாரான இந்த விளம்பர படத்திற்கு “மூன்றாம் கண் (Third Eye)” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை சார்பாக உருவாகியுள்ள இந்த குறும்படம், வீடுகள் மற்றும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் என கூறப்படுகிறது. நடிகர் விக்ரம் ஏற்கனவே ஜே.டி & ஜெர்ரி இயக்கத்தில் உருவான உல்லாசம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.