கேளிக்கை

ரூ.100 கோடி பேரம் – நடிகர் பார்த்திபன் பகீர்

அண்மையில் நடிகர் பார்த்திபன் கூறுகையில், அரசியல் தலைவர் ஒருவர் தன்னை அவரது கட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக கூறினார் என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டு ‘‘சினிமாயணம்’’ என்ற தலைப்பில் பேசினார்.

“சினிமாவுக்கு வருவதற்கு முன் ஆரம்பத்தில் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். என் தந்தை போஸ்ட் மேன் ஆக இருந்தார். அவரது வருமானத்தில் தான் வாழ்ந்தோம். என் அம்மா ரொம்ப கண்டிப்பானவர்.

என் உறவினர் ஒருவர் சினிமா கம்பெனிக்கு கார் ஓட்டி வந்தார். அவருடன் நான் ஷூட்டிங்கை பார்க்க போனேன். அப்போது நடிகர் நாகேஷ் நடித்த படம் எடுக்கப்பட்டது. இடைவேளை நேரத்தில் நாகேஷ் சேரில் உட்காருவார். அவருக்கு குடைபிடிப்பார்கள். விசிறி வீசுவார்கள். செம கவனிப்பு கவனித்தார்கள்.

இதை பார்க்கையில் எனக்கு ஆசை ஏற்பட்டது. நாடக கம்பெனியில் சேர்ந்தேன். எனக்கு தபால்காரர் வேடம் கிடைத்தது. அதன் பிறகு இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவியாளராக பணிபுரிந்தேன். இதைத்தொடர்ந்து மாவீரன் கிட்டு படத்தில் எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதற்கு பின் 10 ஆண்டுகள் கழித்து ஹவுஸ்புல் படத்தில் மிண்டும் தேசிய விருது பெற்றேன் அப்போது தான் எனக்கு தேசிய விருதின் அருமை எனக்கு தெரிந்தது என்று தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக பேசினார்.

அதே சமயம் இன்னொரு வி‌ஷயத்தையும் இங்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

அரசியல் தலைவர் ஒருவர் என்னை அணுகி ரூ.100 கோடி தருகிறேன். கட்சியில் இணைந்து விடுங்கள் என்று கூறினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். எனக்கு அரசியல் என்றால் எதுவும் தெரியாது. அதில் விருப்பமும் கிடையாது. ஆனால் அரசியல் பேசுவேன்”, என்று நடிகர் பார்த்திபன் கூறினார்.

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

1 Reply to “ரூ.100 கோடி பேரம் – நடிகர் பார்த்திபன் பகீர்

Leave a Reply

Your email address will not be published.