இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இப்படத்தின் 2ம் பாகமாக 2.0. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான பட்ஜெட் ரூ.450 கோடி. இதில் ரஜினிகாந்துடன் எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முற்றிலும் முடிக்கப்பட்ட நிலையில், படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளின் பணி விறுவிறுப்பாக நடந்து வந்தது.

வரும் நவம்பர் 29ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து படம் வெளியீட்டுத் தேதி மீண்டும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது தொடர்பாக முறையான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் படத்தின் வ்ப்க்ஷ வேலைகளால் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. தற்போது வ்ப்க்ஷ வேலைகள் கொடுக்கப்பட்ட நிறுவனம் மூடும் நிலையில் இருப்பதாகவும் இதனால் படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த வருடம் தள்ளிப்போகவுள்ளதாக செய்திகள் வருகின்றன.

2.0 படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் படம் வெளியாகாமல் தள்ளிப்போய்க்கொண்டிருப்பது ரசிகர்களுக்கு கோபம் தான்.

மேலும் எந்திரன் குறித்த சர்ச்சைகள் : எந்திரன் கதை புது பிரச்னை நீதிமன்றத்தில் ஷங்கர் மனு