சமூகம் பயணம் ரயில்வே துறை

புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய மேலும் சில தளர்வுகள்- தெற்கு ரயில்வே

அத்தியாவசிய பணியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், கல்வி நிலையங்களில் பணியாற்றுபவர்கள், ஊடக ஊழியர்களும் மின்சார ரயிலில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

சென்னையில், கடந்த மாதம் 5 ஆம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை இன்றியமையாச் சேவைப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது,

கொரோனா தொற்று நடவடிக்கையாக நிறுத்தப்பட்ட புறநகர் ரயில் சேவை கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரசால் சான்றளிக்கப்படும் இன்றியமையாச் சேவைப் பணியாளர்களின் வசதிக்காகவும், பின்னர் அரசு ஊழியர்கள் பயணம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து பொதுமக்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் தாங்களும் பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து எழுப்பிய கோரிக்கையை ஏற்று, தமிழக அரசும் மக்களின் வாழ்வாதாரத்திற்காக புறநகர் ரயில் சேவையை முழுமையாக தொடங்க வேண்டும் என தெற்கு ரயில்வேவிற்கு கடிதம் எழுதியது.

இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள்,

அரசு மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய பொருட்களை கையாளும் மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்,

அனைத்து கல்வி நிலையங்களிலும் பணியாற்றுபவர்கள், தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள்,

சரக்கு மற்றும் பயணிகளுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள்,

குழந்தை நலம், மூத்த குடிமக்கள் நலம், சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளில் ஈடுபடும் சமூக சேவை செய்யும் அமைப்புகள்,

அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பார் கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் வக்கீல்கள் ஆகியோர் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அவர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலத்தில் இருந்து இருந்து அங்கீகார கடிதமும், அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் ரயில்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம்- தமிழக அரசு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.