காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அடித்து கொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் தொடர்பாக டிவிட்டரில் வீடியோ வெளியிட்டு பிரபலப்படுத்திய பாடகி சுசித்ரா, தமிழக காவல்துறையின் உத்தரவையடுத்து தற்போது வீடியோவை நீக்கி உள்ளார்.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை விவகாரம் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரபலமாக காரணமாக இருந்தவர் பாடகி சுசித்ரா. அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் இரட்டைக் கொலை சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டிருந்து தேசிய அளவில் வைரலாகியது.

ஜூன் 25 அன்று வெளியிடப்பட்ட அந்த மூன்று நிமிட வீடியோவில், ஜெயராஜ் தனது மகன் பென்னிக்ஸ் உடன் மொபைல் பழுது பார்க்கும் கடையை நடத்தி வந்தார். கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையிலும் ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்சின் கடை திறந்திருந்ததால், ஜெயராஜை போலீஸ் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அவரது மகன் பென்னிக்ஸ் தந்தையைக் காண காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு இருவரும் அடிக்கப்பட்டு வெகுவாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

தந்தை மகன் இருவரின் முழங்கால்கள் அடித்து நொறுக்கப்பட்டன, லத்திகளால் நசுக்கப்பட்டன, அவர்கள் இரத்தம் வரும் வரை முதுகில் லத்திகளால் சரமாரியாக அடி விழுந்தது, அவர்கள் நிர்வாணமாக்கப்பட்டனர், எஃகு நனைத்த தடியடி அவர்களின் பட்டக்சில் துளைகளை ஏற்படுத்தியது, மற்றும் அவர்களின் பிறப்புறுப்பிலும் காயம் ஏற்பட்டது. அவர்கள் போலிஸ் காவலில் வைக்கப்பட்டு இறந்தனர்.

ஜார்ஜ் ஃப்ளாய்டின் கொலைகாரர்களுக்கு அமெரிக்காவில் கிடைத்த அதே நீதி கிடைக்கும் வரை அதைப் பகிருமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார். ‘JusticeForJeyarajAndFenix’ என்ற ஹேஷ்டேக்குடன் பரப்பப்பட்ட வீடியோ டிவிட்டரில் பிரபலமாகி மில்லியன் பார்வைகளை ஈர்த்தது.

மேலும் வாசிக்க: பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தமிழக அரசு விதித்த தடை நிரந்தரமா..

இதையடுத்து, சாத்தான்குளம் விவகாரம் உலக அளவில் பேசப்பட்டது. பிரபல தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்களிடமிருந்தும் எதிர்வினைகளை ஈர்த்தது.

இந்நிலையியில் சிபிசிஐடி காவல்துறை, சுசித்ராவின் குற்றச்சாட்டில் எந்தவொரு பொருளையும் கண்டுபிடிக்கவில்லை என்றும், அந்த வீடியோ காவல்துறைக்கு எதிரான வெறுப்பை ஊக்குவிப்பதாகவும் கூறியுள்ளது.

எனவே சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ரா சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்த வீடியோவை நீக்குமாறு தமிழக காவல்துறை மற்றும் சிபிசிஐடி போலீசாரும் சுசித்ராவிற்கு உத்தரவிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, பாடகி சுசித்ரா தனது சமூக ஊடக பக்கங்களிலிருந்து வீடியோவை நீக்கியுள்ளார்.