தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேர் மற்றும் காயமடைந்த 4 பேர் உள்பட பாதிக்கப்பட்ட 17 பேரின் குடும்பங்களுக்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். மேலும், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து வரும் முதல்வா் முக ஸ்டாலின், சேலம், கோவை மாவட்டங்களை தொடர்ந்து, இன்று (மே 21) மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், முதல்வா் முக ஸ்டாலின், தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி, நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்துக்குப் பிறகு, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு ஏற்கனவே அரசு வேலை தரப்பட்ட நிலையில் கல்வித்தகுதி அடிப்படையில் பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேர் மற்றும் காயமடைந்த 4 பேர் உள்பட பாதிக்கப்பட்ட 17 குடும்பங்களின் வாரிசுகளுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பேரூராட்சித் துறைகளில் 17 நபர்களுக்கு இளநிலை உதவியாளர்களாகவும், ஒரு நபருக்கு ஈப்பு ஓட்டுநராகவும் பணி நியமன ஆணைகளை இன்று (21.5.2021) மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.

[su_image_carousel source=”media: 23419,23420″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

இந்நிகழ்ச்சியில், சமூகநலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்ள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப.,, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும். மேலும், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாடப் புத்தகத்தில் திமுக பற்றி தவறான தகவல்கள்; காரணமானவர்கள் மீது நடவடிக்கை உறுதி- அமைச்சர் பொன்முடி