சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் டிவிட்டுகள் மாயமானது குறித்து மும்பை போலீஸ் ட்விட்டர் உதவியை நாடி உள்ளது.

நடிகர் சுஷாந்த் கடந்த 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் மரணம் அடைந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் அதிலிருந்து இன்னும் மீண்டு வர முடியாமல் தவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

சுஷாந்த் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை சுஷாந்துக்கு நெருக்கமானவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என 23 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் அளித்த தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தி மற்றும் சுஷாந்தின் மனநல மருத்துவர் என பலரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது நடிகர் சுஷாந்தின் சில ட்விட்டர் பதிவுகள் மாயமாகியிருப்பதாக கூறப்படுகிறது.

சுஷாந்தின் ட்விட்டர் பக்கத்தில் கடைசியாக அவர் டிசம்பர் 27ஆம் பதிவிட்ட ட்விட் மட்டுமே உள்ளது. இதுகுறித்து சந்தேகித்துள்ள மும்பை போலீசார், மறைந்த நடிகர் சுஷாந்த்தின் அக்கவுண்ட்டில் பதியப்பட்ட ட்விட்டுகள் குறித்து தகவல் அளிக்குமாறு ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும் வாசிக்க: நடிகர் சுஷாந்த் சிங் மரணமும், சர்ச்சையும்…

யார் கொடுத்த அழுத்தத்தின் பேரில் அவரது ட்விட்டுகள் டெலி செய்யப்பட்டன. மேலும் சுஷாந்த் மரணமடைந்த பிறகும் டிசம்பர் 27 ஆம் தேதிக்கு பிறகு அவர் பதிவு செய்த சில ட்விட்டுகள் வைரலான நிலையில் அந்த டிவிட்டுகளும் அவரது கணக்கில் இருந்து டெலிட் செய்யப்பட்டுள்ளன.

சுஷாந்தின் டெலிட் செய்யப்பட்ட ட்விட்டுகள் குறித்த தகவல்கள் வெளிவரும் நிலையில் அவரது மரணத்திற்கு பின்னால் உள்ள காரணமும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கை விசாரிக்கும் மும்பை காவல்துறையினர் மரணத்திற்கான காரணத்தையும், நோக்கத்தையும் உறுதிப்படுத்த ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். அண்மையில் சுஷாந்தின் 4 டைரிகள் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சுஷாந்த் சிங் நடித்த ‘Dil Bechara’ திரைப்படம் முகேஷ் சப்ரா இயக்கத்தில் சைஃப் அலி கான், சஞ்சனா சங்கி நடிப்பில் உருவாகி இருக்கிறது. இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், வரும் ஜூலை 24ம் தேதி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ‘தில் பெச்சாரா’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ரிலீஸ் ஆகப் போவதாக அறிவித்துள்ளார்.