தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் (Hindu religious and charitable endowments department) காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்: Executive Officer Grade IV – 65

சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.  குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.150, பதிவுக் கட்டணம் ரூ.150. இதனை ஆன்லைனில் செலுத்தவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.12.2018

தேர்வு நடைபெறும் தேதி: 17.02.2019

விண்ணப்பிக்கும் முறை: Tamilnadu Public Service Commission என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…