தமிழக வேளாண் துறையில் தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் ஆகிய 175 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள்: 175

தோட்டக்கலை உதவி இயக்குநர் (Assistant Director of Horticulture) – 74
சம்பளம்: மாதம் ரூ.56100 – 177500
தகுதி: தோட்டக்கலைத் துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

தோட்டக்கலை அலுவலர் (Horticultural Officer) – 101
சம்பளம்: மாதம் ரூ.37700-119500
தகுதி: தோட்டக்கலைத் துறையில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.200 மற்றும் ஒன்டைம் பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒன்டைம் பதிவுக்கட்டணம் என்ற முறையில் விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.11.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:
தோட்டக்கலை அலுவலர் (Horticultural Officer) – 12.01.2019
தோட்டக்கலை உதவி இயக்குநர் (Assistant Director of Horticulture) – 13.01.2019

எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோயம்பத்தூர்.

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…