தமிழக அரசின் தொழில் துறை மற்றும் வர்த்தகப் பிரிவில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் மற்றும் வேதியியலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்: 02

1. இளநிலை வேதியியலாளர் – 01
சம்பளம்: மாதம் ரூ. 35,900 முதல் ரூ.1,13,500

2. வேதியியலாளர் – 01
சம்பளம்: மாதம் ரூ. 37,700 முதல் ரூ.1,19,500

தகுதி: வேதியியல் துறையில் எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.150. ஏற்கனவே ஒரு முறை பதிவுக்கட்டணம் ரூ.150 செலுத்தி இருப்பவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2019

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…