தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் மதுபானக் கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் ஹாட்ஸ்பாட்டாக வூஹான் மாகாணம் மாறியது போல, தமிழகத்திற்கு கோயம்பேடு என்று மக்கள் அச்சத்தோடு சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 527 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது . கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு விகிதம் என்பது, தமிழகத்தில், இரு மடங்காக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் வரும் மே 7ஆம் தேதி முதல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும். ஒரு நபருக்கு ஒரு நபர் இடைவெளியை பின்பற்றி மதுவை வாங்க வேண்டும். மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என என கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
[su_carousel source=”media: 13348,13349″ width=”700″ height=”800″ items=”1″ scroll=”2″ speed=”100″]
தமிழக அரசின் அறிவிப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்புள்ள சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகள் திறப்பது ஆபத்தானது. அங்கு கூட்டம் சேர விடாமல் தடுப்பது கடினம். வைரஸ் பாதிப்பு குறைவடைந்தால் அதை ஒரு காரணமாக சொல்ல முடியும்.
ஆனால் தமிழகத்தில், பாதிப்பு, அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மதுபான கடைகளை திறப்பது என்பது ஆபத்தானது. மது அரக்கன் மக்களின் வருங்காலத்தை சீர் குலைக்க, அனுமதிக்கக் கூடாது என்று பொதுமக்கள் உட்பட கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவிர்த்துள்ளனர்.
மேலும் வாசிக்க: பெங்களூருவில் மதுகடையில், பெண்களுக்கு தனி வரிசை
முன்னதாக கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் ஊரடங்கு தளர்வு நடவடிக்கையாக திறக்கப்பட்டன. கர்நாடக மதுக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மது வகைகள் மூலம் இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.45 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அம்மாநில கலால் துறை தெரிவித்துள்ளது.