வணிகம்

ஜிஎஸ்டி வசூல் இருந்தபோதும் இந்தியாவில் வேலையின்மை விகிதம் 6.98% ஆக அதிகரிப்பு

இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் வேலையின்மை விகிதமானது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 1.04% ஏற்றம் கண்டு, 6.98% அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy) தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இந்திய தொழில் துறை நடவடிக்கைகள் முடங்கின. உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகமும் பின்னடைவைச் சந்தித்தது. இந்தியா உடனான முதலீடுகளும் குறைந்தன.

இதன் காரணமாக நிறுவனங்களின் வருவாய் குறைந்து, வேலை வாய்ப்புகளிலும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த தாக்கத்தினால் இந்தியாவில் வேலையின்மை விகிதம் அதிகரித்தது. படிப்படியாக கொரோன ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்திய பின்னர் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், வேலையின்மை விகிதமானது கடந்த சில மாதங்களாக பெரியளவில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் வேலையின்மை விகிதமானது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 1.04% ஏற்றம் கண்டு, 6.98% அதிகரித்துள்ளதாக சிஎம்ஐஇ (CMIE) தரவுகள் தெரிவித்துள்ளன. இது செப்டம்பர் மாதத்தில் 6.67% ஆக இருந்தது.

விவசாயத்துறையில் நல்ல வளர்ச்சி கண்டுள்ள போதிலும், கடந்த அக்டோபர் மாதத்தில் வேலையின்மை விகிதம் சற்று அதிகரித்துள்ளது. ஆனால் இதில் நகர்புறங்களில் வேலையின்மை விகிதம் 7.15% குறைந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 8.45% இருந்தது.

இந்நிலையில் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது அக்டோபர் மாதத்தில் வேலையின்மை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் விகிதமானது நடப்பு ஆண்டில் இது வரை இல்லாத அளவு 1 டிரில்லியன் ரூபாயினை தாண்டி வசூலில் சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும், 10.25% அதிகரித்து, 1.05,155 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது. இது பொருளாதாரம் மீண்டு வருவதற்கான ஒரு நல்ல அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி வசூல் நடப்பு ஆண்டில் இரண்டு இலக்க வளர்ச்சியினைக் கண்டு 1 டிரில்லியன் ரூபாயினை தாண்டியுள்ளது இதுவே முதல் முறை.

கார்ப்பரேட் பதுக்கலுக்கு வழிவகுக்கும் வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றம்; ஸ்டாலின்

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.