தேசியம் தொழில்கள்

ஜிஎஸ்டி ‘நில் ரிட்டன்’ தாக்கல் செய்ய அலைபேசி மூலம் புது வசதி

சரக்கு மற்றும் சேவை வரி கணக்குத் தாக்கல் செய்ய, பில் ஏதும் இல்லாத நிலையில் மொபைல் போனில் குறுந்தகவல் வாயிலாக, ‘நில் ரிட்டன்’ தாக்கல் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
சரக்கு மற்றும் சேவை வரிசெலுத்த மாதந்தோறும் ஜிஎஸ்டிஆர் 1 மற்­றும் ஜிஎஸ்டிஆர் – 3பி படிவங்கள் தாக்கல் செய்­யப்படுகின்றன.
 
இதில் ஜிஎஸ்டிஆர் – 3பி படிவத்தை மாதம்தோறும் 20ம் தேதிக்குள், தாமதக் கட்டணம் இன்றி தாக்கல் செய்யலாம்.
 
இந்நிலையில் தற்போது, ஜிஎஸ்டி கணக்குத் தாக்கல் செய்ய பில் ஏதும் இல்லாத நிலையில் மொபைல் போனில் குறுந்தகவல்(எஸ்எம்ஸ்) வாயிலாக, ‘நில் ரிட்டன்’ தாக்கல் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதன்படி ஒரு மாதத்தில் எந்த சேவையோ, விற்பனையோ இல்லை எனில் அந்த மாதத்துக்கு ‘நில் ரிட்டன்’ தாக்கல் செய்ய வேண்டும். இதை மொபைல்போனிலிருந்து குறுந்தகவல் அனுப்பி, தற்போது தாக்கல் செய்யலாம்.
 
ஆனால், இதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, ஜிஎஸ்டி பதிவு செய்துள்ள நிறுவனத்தின் பதிவாளரின் மொபைல் எண், ஜிஎஸ்டி போர்டலில் பதிவு செய்து இருக்க வேண்டும்.
 
அத்துடன் ஏற்கெனவே ஜிஎஸ்டிஆர் – 3பி படிவம் தாக்கல் செய்து இருக்க வேண்டும். எந்த வரியும் நிலுவையில் இருக்கக் கூடாது மற்றும் தாமதக் கட்டணமோ அல்லது வட்டியோ செலுத்தி இருக்கக் கூடாது.
 
இந்த நிபந்தனைகளின்படி, மாதந்தோறும் குறுந்தகவல் அனுப்பி நில் ரிட்டன் தாக்கல் செய்யலாம்.
ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.