கேரளாவில் ஆட்சியை கலைக்க போவதாக அமித் ஷா விடுத்த எச்சரிக்கைக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த 17ம் தேதி சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டது. ஆனால் கோவிலுக்குள் பெண்கள் நுழைய கடும் எதிர்ப்பு நிலவியது. இந்துத்துவா அமைப்பினர், பாஜகவினர் பெண்கள் நுழைவிற்கு எதிராக தீவிரமாக போராடினார்கள்.

சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராடியவர்களை அம்மாநில அரசு லுக் அவுட் நோட்டிஸ் கொடுத்து தேடி கைது செய்து வருகிறது. கேரளாவில் மொத்தம் 1400 பேர் ஒரே வாரத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து நிறைய பேர் கைதாகி உள்ளனர்

இந்த நிலையில் கேரளா சென்றிருந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, சபரிமலை தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால் கேரளா அரசு பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். கேரளாவில் சபரிமலை போராட்டக்காரர்கள் கைது செய்வதை அரசு நிறுத்த வேண்டும். இல்லையென்றால் ஆட்சியை கலைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் ”நீங்கள் யார் எனக்கு ஆர்டர் போட. நீங்கள் என்ன சுப்ரீம் கோர்ட்டா. இல்லை நீங்கள் சொன்னதைதான் சுப்ரீம் கோர்ட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா.? என்னை மிரட்டுவதாக நினைத்துக் கொண்டு நீங்கள் சுப்ரீம் கோர்ட்டை மிரட்டுகிறீர்கள். ஒரு பெரிய கட்சியின் தலைவருக்கு எப்படி பேசுவது என்று கூட தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

ஆனால் இதை எதிர்பார்க்காத அமித்ஷா தனது பேச்சு திரித்து சொல்லபட்டு விட்டாதாக கூறி கேரளாவில் ஆட்சியை கலைக்க போவதாக தான் சொல்லவில்லை என் பல்டி அடித்ததை கேரளா பாஜக வினர் அதிர்ச்சியுடன் கடந்தனர்

ஆனால் இதை பொருட்படுத்தாத முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக கேரளாவில் சபரிமலை போராட்டக்காரர்களை கைது செய்தால் ஆட்சி கலைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த அடுத்த நாளே இன்னும் பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நேற்று மட்டும் மொத்தம் 3554 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை எதிர்பார்க்காத பாஜக உள்ளிட்ட ஹிந்துவா அமைப்பினர் சட்டப்படி செயல்படும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் அனுகுமுறையை எதிர்கொள்ள முடியாமல் சோர்வடைந்து உள்ளனர் ..