சென்னை அருகே நோக்கியா ஆலையில் பணியாற்றிய ஊழியர்களில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆலை பணிகள் நிறுத்தப்பட்டு, நோக்கியா ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா நிறுவனத்தின் ஆலை செயல்பட்டு வருகிறது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக நோக்கியா ஆலை பணிகள் படிப்படியாக துவங்கப்பட்டன.

ஆனால் வெளியான தகவலின்படி, நோக்கியா நிறுவனத்தில் பணியாற்றி வந்த 42 ஊழியர்களுக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அடுத்தடுத்து சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோக்கியா நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.

ஆனால், ஆலையில் எத்தனை தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பதை நோக்கியா வெளியிடவில்லை. இந்நிலையில், அரசு சார்பில் விதிக்கப்பட்ட வழிமுறைகளுக்கு கட்டுப்பட்டு உற்பத்தி ஆலை பணிகள் துவங்கி நடைபெற்று வந்ததாக நோக்கியா தெரிவித்துள்ளது.

மேலும், சமீபத்தில் திறக்கப்பட்ட ஆலையில், பணிகளின் போது சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்பட்டதாகவும், ஆலையில் உள்ள உணவகங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

[su_carousel source=”media: 14150,14149″ limit=”100″ width=”700″ height=”400″ items=”1″ scroll=”2″ speed=”0″]

முன்னதாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ, கடந்த வாரம் டெல்லியின் புறநகரில் உள்ள ஆலையை மீண்டும் திறந்த நிலையில், தனது ஆலையில் பணியாற்றி வந்த ஊழியர்களில் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆலையை மூடியது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: ஒரே நாளில் 805 பேர்.. நாளுக்கு நாள் அதிகமாகும் கொரோனா பாதிப்பு