முதல்வர் எடப்பாடி மீது கொலைப் புகார் கூறியதால் சயன், மனோஜை போலீசார் கைது செய்தனர். எழும்பூர் நீதிமன்றத்தில் சயன், மனோஜை ஆஜர்படுத்திய போலீசாரிடம் நீதிபதி சரமாரி வினா எழுப்பினர்.
 
உங்கள் தரப்பு வழக்கறிஞர் யார்? என்று சயன், மனோஜிடம் நீதிபதி சரிதா கேள்வி எழுப்பினார்.
 
அதர்க்கு அவர்கள் டெல்லியில் இருந்து வழக்கறிஞர் வாதாட வருவதாக நயன், மனோஜ் பதில் அளித்தனர்.
 
கோடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் ஆகியோர் மீது புகாரளித்தவர்களிடம் விசாரணை நடத்தினீர்களா? எனவும், சயான், மனோஜ் பேட்டியால் போலீஸ் கூறுவதுபோல் எங்கு கலவரம் ஏற்பட்டது? அரசுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது?  எனவும் கேள்வி எழுப்பினார்.
 
புகாருக்கு உள்ளான எடப்பாடியிடம் விசாரித்து விளக்கம் பெற்றீர்களா என போலீசுக்கு கேள்வி எழுப்பப்பட்டது.
 
எடப்பாடி மீது புகார் கூறிய சயன், மனோஜ் 3 மணி நேரமாக நீதிமன்றத்தில் இருந்த நிலையில் தமிழக அரசின் சரியான பதில் இல்லாத காரணத்தினால் கொடநாடு கொலை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி மீது குற்றம்சாட்டியதாக கைது செய்யப்பட்ட 2 பேரையும் காவல் நீட்டிப்பு செய்ய மறுத்து மாஜிஸ்திரேட் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார்.
 
இதனால் இந்த விவகாரம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
முன்னதாக ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கடந்த 2017 ஏப்ரல் 24ம் தேதி கொடநாடு எஸ்டேட்டிற்குள் சென்ற ஒரு கும்பல், செக்யூரிட்டியை கொலை செய்து விட்டு, அங்கிருந்த ஆவணங்கள், பணத்தை கொள்ளையடித்து சென்றது.
 
இந்த விவகாரத்தில் கேரளாவைச் சேர்ந்த சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், பணத்தை கொள்ளையடிக்கவில்லை.
 
அதற்கு பதில் முக்கிய ஆவணங்களை ஒரு பையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்று விட்டதாக கூறியிருந்தனர். முக்கிய குற்றவாளியாக கூறப்பட்ட கனகராஜை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் வாகனம் மோதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
 
அதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த சயானின் மனைவி, மகள் ஆகியோரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர். சயான் மட்டும் படுகாயடங்களுடன் உயிர் தப்பினர்.
 
கொடநாடு விவகாரத்தில் அடுத்தடுத்தது 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.இதுகுறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில் திடீர் திருப்பமாக தெகல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், சயான், மனோஜ், வாளையார் ரவி உட்பட 6 பேர் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக பேட்டியளித்து, கொடநாடு வழக்கு தொடர்பாக 16 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஆவணங்களையும் பத்திரிகையாளர்கள் முன்பு வெயியிட்டனர்.
 
மேலும், இந்த மர்ம மரணங்கள் அனைத்தும் கொலைகள்தான் என்று கூறிய மேத்யூ, இந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நேரடியாக குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்தார்.
 
அதைதொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேட்டி அளித்த தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், கூலிப்படை தலைவர் சயான் மற்றும் மனோஜ், வாளையார் ரவி உட்பட 6 பேர் மீது சென்னை மாநகர காவல் துறையில் முதல்வர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
 
அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார், தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், கூலிப்படை தலைவன் சையன், மனோஜ், வாளையார் ரவி உட்பட 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
பின்னர் 6 பேரையும் கைது செய்ய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி, இணை கமிஷனர் அன்பு மேற்பார்வையில், மத்திய குற்றப்பிரிவின் துணை கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை ேபாலீசார் டெல்லிக்கும் மற்றொரு தனிப்படை கேரளாவுக்கும் சென்றது.
 
டெல்லி சென்ற துணை கமிஷனர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படையினர் ேநற்று முன்தினம் அதிரடியாக கூலிப்படை தலைவர் சயான், மனோஜ் ஆகியோரை துவாரகா பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
 
ஆனாலும் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேலை போலிசாரால் நெருங்க முடியவில்லை.
 

தொடர் மரணங்கள் நிகழ்ந்த காலத்தில் தினகரன் மற்றும் பழனிசாமி இருவரும் ஒரே அணியில் இருந்தனர் என்பது குறுப்பிடதக்கது

பின்னர் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜை துணை கமிஷனர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படையினர் நேற்று அதிகாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
 
பின்னர் இருவரையும் எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
 
இந்த விசாரணையில், கொடநாடு விவகாரம் தொடர்பாக வழக்கு நடந்து வரும் நிலையில் திடீரென முதல்வருக்கு எதிராக போர் கொடி எழுப்பியது ஏன்?
 
நீதிமன்றத்தில் எந்த தகவலும் அளிக்காமல் தொலைக்காட்சிகளுக்கு மட்டும் பேட்டி அளித்ததன் பின்னணி என்ன?
 
உங்களை பின்னால் இருந்து இயக்குவது யார்?
 
முதல்வருக்கு எதிராக நீங்கள் வைத்துள்ள ஆதாரங்கள் என்ன என்பது உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு 10 மணி நேரத்திற்கு மேல் போலீசார் தொடர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அனைத்தும், இணை கமிஷனர் மற்றும் துணை கமிஷனர்கள் நடத்தினர்.
 
அப்போது, எங்களுக்கு முதல்வர் எடப்பாடியை தெரியாது. ஆனால், எடப்பாடியுடன் இருக்கும் படத்தை கனகராஜ் காட்டியதாகவும், அவருடன் நெருங்கிய சொந்தக்காரர் என்று கூறியதால்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டோம்.
 
நாங்கள் கொலை செய்ய வேண்டும் என்று இதில் ஈடுபடவில்லை. ஆனால் கட்டிப்போட்டதில் அவர் இறந்து விட்டார். நாங்கள் பணத்தை எடுக்கவில்லை. கனகராஜ் ஆவணங்களை எடுத்தார். அது குறித்து கேட்டபோது அதைப் பற்றி தெரியாது. ஆளும்கட்சி பிரமுகர் எடுத்து வரச் சொன்னதால் எடுத்துச் செல்வதாக கூறினார்.
 
ஆனால் கனகராஜ் மற்றும் நான் குறி வைக்கப்பட்டதால் பயந்து விட்டேன். அவரும் இறந்து விட்டார். என்னுடைய மனைவி, மகள் இறந்து விட்டனர். கனகராஜ் சொன்னபடி ரூ.5 கோடியை என்னிடம் வழங்கவில்லை என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
 
ஆனால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், உங்களை இயக்குவது யார்? மேலும், யார் சொல்லி இந்த பேட்டியை கொடுத்தீர்கள். உங்களை தூண்டியது யார் என்று தொடர்ந்து தங்கள் பாணியில் விசாரித்தும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்பட்ட நிலையில அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினர்