நிறவெறிக்கு எதிராக கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை’ என்ற எழுச்சிமிக்க பாடல் இன்று வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=TIUkCI9F1CE&feature=emb_logo” width=”700″ autoplay=”yes” title=”கவிஞர் வைரமுத்துவின் ‘காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை'”]

ஜார்ஜ் பிளாய்ட் மரணிக்கும்போது கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் ‘என்னால் சுவாசிக்க முடியவில்லை’. இந்த வார்த்தைகள் நிறவெறிக்கு எதிராக இன்று உலகத்தையே தட்டி எழுப்பியுள்ளது. உலகத்தின் பெரும்பான்மை நாடுகளில் நிறவெறிக்கு எதிரான கிளர்ச்சி காட்டுத் தீயாய் பரவிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் போராட்டத்திற்கு ஆதரவாகவும், நிறவெறிக்கு எதிராகவும் கவிஞர் வைரமுத்து ‘காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை’ என்ற ஒரு உணர்ச்சிமிகு பாடலை எழுதியிருக்கிறார். இப்பாடலுக்கு இசையமைத்து, பாடியுள்ளார் ரமேஷ் தமிழ்மணி .

போராடும் மக்களின் சுதந்திர கீதமாக, விடுதலை நெருப்பை பற்ற வைக்கக் கூடிய கறுப்பின மக்களுக்கு ஆதரவான ஒரு தமிழனின் குரல் இது என்று இப்பாடல் உலகம் முழுவதும் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

மேலும் வாசிக்க: மாபெரும் இயக்கத்தை உருவாக்கிய ஜார்ஜ் பிளாய்ட் மரணம்