திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மணமகன் வேறொரு பெண்ணுடன் ஓடிவிட்டதால், மணப்பெண் மாமனாரை திருமணம் செய்த சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது.

பீகாரின் சமஸ்திபூர் பகுதியை சேர்ந்தவர் ரோஷன் லால் (65). ரோஷன் லாலின் மகனுக்கும் ஸ்வப்னா (24) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், திருமண நாளன்று ரோஷன் லாலில் மகன் தான் காதலித்த பென்ணுடன் மாயமானார். இதுகுறித்து தகவல் வெளியானபோது ஸ்வப்னாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

திருமணம் நின்றால் தனது கவுரவம் பாதிக்கப்படும் என்று கருதிய ஸ்வப்னாவின் தந்தை, நிச்சயித்த நேரத்தில் திருமணத்தை நடத்த வேண்டும் என முடிவு செய்தார். மணமகனின் குடும்பத்துடனான உறவை தொடர விரும்பிய அவர், ரோஷன் லாலிடம் சென்று தனது மகளை திருமணம் செய்துகொள்ள தயாரா என்று கேட்டுள்ளார்.

இதனை கேட்டு ஆடிப்போன ரோஷன்லால் பின்னர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஸ்வப்னாவும், வேறுவழியின்றி ரோஷன் லாலை திருமணம் செய்துகொண்டார்.