10% இடஒதுக்கிட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
10% இடஒதுக்கிட்டை எதிர்த்து சமத்துவத்துக்கான இளைஞர் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தது.
 
இந்த மனுவில் 10% இடஒதுக்கீடு சட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக 4 வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம் கடந்த 9ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
 
இதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு முறை வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய பணியாளர் நலத்துறை அறிவித்துள்ளது.
 
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் அல்லது அதற்கு பிறகு அறிவிக்கப்படும் வேலைவாய்ப்புகளில் இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வருகிறது.
 
இதன்படி ஏற்கனவே உள்ள இடஒதுக்கீடு முறையின் கீழ் இடம்பெறாத உயர்சாதி வகுப்பினர் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் இந்த திட்டத்தின் கீழ் இடஒதுக்கீடு பெற தகுதி பெற்றவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் 10% இடஒதுக்கிட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஆனாலும் 10% இடஒதுக்கீடு சட்டத்தை தடை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்தது.
 
உயர்சாதி பிரிவினர் பெருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு இன்றுமுதல் அமலாகிறது. மத்திய அரசு, மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் சார்பாக இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.