தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் மகள் சுப்ரியா சுலே எம்.பி., நேற்று பிற்பகலில் சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்துக்கு வந்தார். அங்கு, திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டது. பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின்.,

மின்துறையில் நடந்த ஊழல் குறித்து பேசிய என் மீது வழக்கு தொடர்வேன் என்று மின்துறை அமைச்சர் கூறியிருந்தார் அவருக்கு நான் கொடுத்த ஒரு வார கெடுவில் ஒரு நாள் முடிந்தது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில் காற்றாலை மின்சாரத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டை மின்துறை அமைச்சர் தங்கமணி மறுத்தார். மேலும் தொடர்ந்து இதுபோல கூறினால் வழக்கு தொடரப்படும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், தங்கமணி கூறியவாறு என் மீது வழக்கு போட வேண்டும். ஒரு வாரத்திற்குள் வழக்கு போடாவிட்டால் நான் வழக்கு தொடருவேன் என்று கூறினார். இந்நிலையில் நேற்று அண்ணா அறிவாலயம் வந்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது, மின்துறை ஊழல் குறித்து அமைச்சர் தங்கமணிக்கு நான் தந்த ஒரு வார கெடுவில் ஒரு நாள் முடிந்து விட்டது என்று கூறினார்.

பிரதமர் மோடி வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சியை தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே அளித்துள்ள பேட்டி ரபேல் விமானப் போர் ஒப்பந்தத்தில் உள்ள சந்தேகத்தை வெளிப்படுத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து இந்திய மக்களுக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டிருக்கிறார். இதன் உண்மை நிலையை அறிய முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்