முகநூலில் இன்று ஒரு சுற்று சுற்றிய போது..
பெருவாரிய திராவிட சுயமரியாதையால் ஈர்கப்படவர்கள்.. திமுகவில் மதிமுகவில் அதிமுகவில் திகவில் கிட்டதிட்ட கடந்த 3 மணி நேரத்திலே 32000 பேர் #அண்ணா என்ற ஹாஸ்டாகை பயன் படுத்தி அண்ணாவை புகழ்ந்து உள்ளார்கள்..

இங்கு ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும் அண்ணா மறைந்து இன்றோடு 52 ஆண்டுகள் ஆகி விட்டது.. ஆனாலும் கொண்டாடும் பொருளாக அவர் நீடித்து வருகிறார்.. கிட்டதிட்ட 85% ஓட்டுகளை வாங்கும் மக்கள் சக்தி கொண்ட கட்சிகள் ஆதரவை அறிஞர் அண்ணா இன்றும் பெற்றே..

திமுகவினரோ அண்ணாவின் பேச்சுகளை அவர்கள் வாழ்ந்த முறையினை பாராட்டி சொல்லி வருவதை கண்ணுற முடிகிறது.. வரலாற்று நிகழ்வுகளை மேற்கோள் கட்டி பல மதிமுக மற்றும் திகவினர் செய்த நீண்ட பதிவுகள் அருமை..

அதிமுகவினர் அண்ணாவை ஒரு வழிபாட்டு சிலையாக மரியாதை தரும் ஐக்கானாக மட்டுமே பேச, இதுவே இன்றைய காலத்தில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் உள்ள வேறுபாட்டை ideological differentiation தருவதாக கருத வேண்டியுள்ளது..

அடியேனுக்கு அண்ணா… கோடைகாலத்தில் ஐஸ்கிரீம் நுனிநாக்கில் படும் ஸ்பரிசம் தரும் பரவசம்.. ஹி ஹிஸ் அல்டிமேட் ever green தீர்க்கதரிசி .. Idealist politician..

இரு மொழிகொள்கையை உருவாக்கியவர் என்ற முறையில்.. காரணம் பின்னாளில் ஐடி துறையில் தமிழ் நாடு முன்னேற இது பெரும் பங்கை வகித்ததுள்ளதால்..

அரசியலை எப்படி அணுக வேண்டும் என சொன்ன முறையில்.. காரணம் #தமிழ்நாடு எப்போதுமே பல காரணிகளில் முதல் மூன்றில் ஒரு மாநிலமாக அவரின் தம்பிகள் உழைக்க காரணமாக அமைந்துள்ளதால்..

வலிமையான மாநில சுயாட்சி இல்லாவிட்டால் இந்தியா என்ற ஒரு யூனியன் சிதைவுறும் என எச்சரித்து கர்ஜித்த முறையில்.. காரணம் இன்றைக்கு திமுக அரசு ஒரு சாதி சூழ் பயிற்சி மையங்கள் கொழுக்க பயன்படும் கொடூர #நீட் தேர்வை எதிர்த்து..

கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வரவேண்டுமென்று எடுத்துவரும் முயற்சிக்கு இதுவே மூலகாரணமாக அமைந்துள்ளதால்.. பல மதிமுகவினர் திகவினர் பதிவுகள் சிறப்பாக இருந்தாலும் காலம் கருதி சிலவற்றை மட்டுமே கீழே..

Conjeevaram Natarajan Annadurai – #CNA
(15 September 1909 – 3 February 1969)
Known as #Anna also known as Arignar Anna / Perarignar Anna
#Wikipedia
மூக்குப்பொடியை, தான் போட்டுக்கொண்டு. டில்லியை தும்மவைத்தவர் அவர்தான் #அண்ணா

தினகரன் அரசு சார்பு Kalaignar Karunanidhi
ஸத்யமேவ ஜயதே ❌
வாய்மையே வெல்லும்✔️ ;
மெட்ராஸ் கவர்ன்மென்ட் ❌
தமிழ்நாடு அரசு ✔️ ;
செக்ரடேரியேட் ❌
தலைமைச் செயலகம் ✔️ ;
மெட்ராஸ் மாகாணம் ❌
தமிழ்நாடு மாநிலம் ✔️

Er Rajini Munips சார்பு திராவிட அரசியல்
பேரறிஞர் பெருந்தகை #அண்ணா அவர்களின் 113வது பிறந்தநாள் விழா அவரை போற்றி வணங்குவோம்
மேச்சேரி பானுபிரதாப் சார்பு #அதிமுக
தாய்க்கு (தமிழ்நாடு என்று) பெயர் வைத்த தலைமகன் #அண்ணா.

சங்கரலிங்கனார் உயிரைக் கொடுத்துக் கேட்டும் காமராஜருக்கு வராத துணிவு அது. ஏன் காமராஜரைச் சொல்கிறேன் என்றால்..
பச்சைத் தமிழர் என்று அடையாளம் வைத்தபோதும் இந்தியப் பாசத்தில் தமிழ் இனத்தை இரண்டாம் இடத்தில் வைத்தமைக்கு.. அதன் விளைவுகளைச் சந்தித்தமைக்கு காமராஜர் உதாரணம் : சாந்தி நாராயணன் சார்பு #திராவிடம்
CNA is our DNA : Sylvia Nithia Kumari சார்பு #திமுக
#சவெரா 15-09-2021 10:00 AM

https://www.facebook.com/savenra/posts/7014425618583301