புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி , அனிதா ஏன் 1176 மார்க் வாங்கியும் ., 98.75 கட் ஆப் வாங்கியும் ., தமிழக மாணவர்களிடத்தே திணிக்கப்பட்ட நீட்டால் மருத்துவ கனவு பறிக்கப்பட்டது என்ற விஷயத்தை மறைத்து திசை திருப்பும் முயற்சியாக..
திமுகவின் அரியலுர் மாவட்ட செயலாளர் சிவசங்கரன் மீதும் , கல்வி ஆலோசகர் கஜேந்திர பிரின்ஸ் மீதும் பழி சுமத்தி , தற்கொலைக்கு தூண்டினார்கள் என்றும் , மேலும் இந்த தற்கொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கூற வேண்டிய பின்னணி என்ன...
கிருஷ்ணசாமி 2016 ஒட்டபிடாரம் (SC ) சட்டமன்ற தேர்தலில்சமர்பித்த விவரம் மூலம் அறிவது
கிருஷ்ணசாமி 2011-2016 காலத்தில் அதாவது சுமார் ஐந்து வருடங்களில் தனது சொத்து மதிப்பு 159% உயர்ந்து 109076875 ரூபாய் இந்த ஐந்து வருடங்களில் உயர்ந்துள்ளது என்றும்...
இவர் சின்டிகேட் வங்கி புலின்களத்தூர் கிளைக்கு இவர் மனைவியின் மூலம் பெற்ற கடன் முறையாக செலுத்தப்படாமல் ரூபாய் 74 லட்சம் என்று வங்கி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன .
மேலும் இவர், இவர் மனைவி மற்றும் மகன் பேரில் 14 வங்கி கணக்குகள் வைத்துள்ளதாகவும் அதில் வைப்புத் தொகை சுமார் 34 லட்சம் வைத்துள்ளதாகவும் , தமிழகம் எங்கும் இவர் மனைவி மற்றும் மகன் பேரில் 90 ஏக்கர் நிலம் வைத்துள்ளதாகவும் இவரே குறிப்பிட்டுள்ளார்.
கிருஷ்ணசாமி மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்திறத்தில் பொது சொத்தை விஷமத்தனமாக தாக்கினார் என்று வழக்கு எண் 168/2009 நிலுவையில் உள்ளது . இது தவிர கோயில்பட்டி நீதிமன்றத்தில் வழக்கு எண் 177/13, ராஜபாளையம் நீதிமன்றத்தில் வழக்கு என் 261/14, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு எண் 1181/14, 1182/14, ராஜபாளையம் நீதிமன்றத்தில் வழக்கு எண் 2599/14, 2600/14 மற்றும் 2616/14 ஆகிய எட்டு கிரிமினல் வழக்குகளிலும் ஒன்றில் கூட இவர் அவ்வழக்கை தள்ளுபடி செய்ய இதுவரை எந்த மனுவும் அவர் கோரவில்லை என்பதும். குறிப்பிடத்தக்கது .
பொதுவாக எம்பிபிஎஸ் படிக்க 5.5 வருஷ காலம் ஆகும். ஆனால் இன்றோ தேவேந்திர வேளாளர் மக்கள் இடஒதுக்கிடை விட வேண்டும் என்று கூறும் இவர் 1971 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பள்ளி பூலவாடி கோயம்பத்தூர் முடித்த பின்னர் எம்பிபிஎஸ் படிக்க எடுத்துக்கொண்ட காலம் ஏழு வருடம். இன்று இடஒதுக்கிடை வேண்டாம் என்பவர் அவருக்கு படிக்க உபயோக படுத்திக்கொண்டது இடஒதுக்கீடு முறை மட்டுமே. இவர் குடும்பத்தில் உள்ள மகன் மற்றும் மற்றவர்கள் உயர்கல்வி பெற்றதும் அதே இடஒதுக்கீடு மூலம் மட்டுமே.
2015 சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து" உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள். அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் மெடிக்கல் ஷீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா" எனக்கேட்க அப்போது கிருஷ்ணசாமி " நான் மறக்கவில்லை.அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப்பார்த்து வணக்கம்போட" இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடுங்கள் என்பதுபோல் வெடுக்கென்று ஜெயலலிதா முகத்தை திருப்பி கொண்டார் என்ற விவரத்தை அன்றைய கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் பால பார்தி குறிப்பையும் முகநூலில் காணும் வேளையில்...
புதிய தமிழகம் கட்சி ஆரம்பிக்கும் வரை முன்னர் ஒரு சில லட்சங்களில் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்தவர் ஆனால் கடந்த பத்து வருடங்களில் கோடிகளில் வருமான வரி தாக்கல் செய்கிறார்.
இவர் 2011 சட்டசபை தேர்தல் நின்று வென்ற தொகுதியும் இடஒதுக்கீடு கோரிய அதே தொகுதி. இவர் அதில் சமர்ப்பித்த ஜாதி சான்றிதழ் பொய்யானது என்று புலின்குளத்தை சார்ந்த குமார் தாக்கல் செய்த மனு உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்படாமலிருக்கிறது என்று கூறுகிறார் மனுதாரர்.
கிருஷ்ணசாமி வருமான வரி பிரச்சனை ., அதிக சொத்து வந்த பிரச்சனை ., மற்றும் கிருஷ்ணசாமி கட்ட விருப்பப்படும் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை பிரச்சனை ,, ஜாதி சான்றிதழ் வழக்கு , என்றெல்லாம் ஒன்று சேர ., இது போதாது என்று திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் இவரை கண்டுகொள்ளமால் கைவிட ., யாரை முழுங்கினால் தமிழகத்தில் கால் ஊன்றலாம் என்று வெறியில் செல்லும் பிஜேபி கதவு திறக்க ., மாற்றத்தை யூகிக்க மேல எதுவும் சொல்ல வேண்டியது இல்லை.
மரணித்த அனிதாவோ 100 சதுர அடி வீட்டில் கழிவறை வசதிகூட இல்லாமல் ஒற்றை விளக்கொளியில் படித்து 98.75 கட் ஆப் மார்க் வாங்கி உள்ளார். அவரை நேரடியாக குறை சொல்ல பிஜேபிக்கு பயம் . ஆளும் அதிகாரம் சுவைக்கும் ஆளுமைகள் கிருஷ்ணசாமிகளை கேடையமாக்கி நெருப்பு மூட்டி அதில் குளிர் காய்ந்து வருகின்றனர்.
இப்படிபட்ட அனித்தாக்கள் இடஒதுக்கீடு மூலம் மருத்துவராவதை கிருஷ்ணசாமிக்கள் உள்ளுக்குள் விரும்புவார்கள் என்கிறது மனித உளவியல் அனால் survival for the fittest என்ற கோட்பாடு தன்னிலை மறக்க செய்து வாயில் விஷத்தை ஏற்றுகிறது . விளைவு கிருஷ்ணசாமிகளால் விஷமத்தனமாக கேவலப்படுத்தப்படும் அனிதாகளின் கனவுகள் மெளனித்து கொல்ல படுகிறது.
ஏழைகள் கண்ணீரின் சூடு, சாமானிய பெண் கண்ணகியின் சலங்கை., மாமன்னர்களை இருந்த இடம் தெரியாமல் அழித்துள்ளது. ஆள்வோர் மமதையில் கிருஷ்ணசாமி என்கிற கவசத்தை பயன்படுத்தி சிரித்து மகிழலாம் தமிழகம் நீட் தொலைத்து பதில் சொல்லும் போது அனிதாக்களின் கனவுகள் மலர்ந்து சிரிக்கும் .
உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு
பின்னுட்டம்
(பின்னுட்டம் தொழில் நுட்ப ஆய்வுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது...)
பின்னுட்டம் இடுக