அப்போது சுளுக்கு மட்டுமில்லை, எலும்பு முறிந்தாலும், அதேக் கட்டுதான். எலும்பு நொறுங்கி இருந்தால் எக்ஸ்பர்ட் இடம் தான் போக வேண்டும். அந்த எக்ஸ்பர்ட்கள், ஆந்திராவில் இருக்கும் நகரி புத்தூரில் தான் உண்டு.

இப்போதும் நகரி புத்தூரில் அதே போல் எக்ஸ்பர்ட்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சென்னையில் கிளைகளும் இருக்கிறது. ஆனால் பழைய மாதிரி பெரும் எண்ணிக்கையில் மக்கள் அங்கே செல்வதில்லை. பழைய எக்ஸ்பர்ட்கள் போல் இவர்கள் கையால் நிரண்டி கண்டுபிடிப்பதில்லை. எக்ஸ்ரே எடுக்க சொல்லி அதை வைத்து தான் கட்டு போடுகிறார்கள். அவர்கள் அப்டேட் ஆகி விட்டார்கள்.

ஆனால் நாம் தான் அப்டேட் ஆகவில்லை போல. இப்போது சுளுக்கு, எலும்பு முறிவு என்றால் நாம் யாரும் நகரி புத்தூர் எக்ஸ்பர்ட் தேடிப் போவோமா? நிச்சயமாக போக மாட்டோம். ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் தேடி கண்டுபிடித்துத் தான் போவோம்.

Special Correspondent

இன்னும் பாட்டி வைத்தியம், இயற்கை வைத்தியம், சித்த வைத்தியம் என கதை சொல்லிக் கொண்டிருக்கிறது ஒரு ஏமாற்றுக் கூட்டம். அதற்கான கட்டம், இப்போது டெங்குவில் தாண்டி விட்டது.

ஒரு வாட்ஸ் அப் செய்தி எனக்கு வந்தது. “காலில் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். டெங்கு பரப்பும் கொசு கால் வரை தான் பறக்கும், அதற்கு மேல் பறக்காது“, என்பது தான் அந்த செய்தி. இத்தோடு நிறுத்தினார்களே என மகிழ்ச்சி அடைய வேண்டியதாக இருக்கிறது.

“தண்டு மாரி அம்மன்” என்று ஒரு கோயில் உண்டு. அங்கு போய் பப்பாளி அபிஷேகம் செய்தால், டெங்கு போய் விடும், இது நம் முன்னோர்கள் சொன்னது என சொல்லவும் ஒரு கூட்டம் இருக்கிறது.

இதை சொன்னால் நம்பவும் ஒரு கூட்டம் இருக்கிறது. ‘டெங்கு மாரியம்மன்’ என்பது தான் மருவி ‘தங்கு மாரியம்மன்’ ஆகி, அதுவே பின்னர் ‘தண்டு மாரி அம்மன்’ ஆகிவிட்டது. இதை டெங்கு மாரியம்மன் கோயில் பூசாரி சொன்னால் நம்ப வேண்டியது தானே.

அதே போல தான் இன்னொரு கூட்டம், ஆங்கில மருத்துவத்தை நம்ப வேண்டாம் எனக் கிளம்பி இருக்கிறது. சரி, டெங்குக்கு என்ன உங்கள் வைத்தியம் என்றால் அவர்களால் உறுதியாக எதுவும் சொல்ல முடியவில்லை.

Special Correspondent

நாங்களும் அரியலூரில் “நிலவேம்பு கஷாயம்” கொடுத்தோம். அது முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். ஆனால், அதுவே டெங்குக்கான மருத்துவம் இல்லை. அது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இருக்காது என்றும் செய்திகள் வருகின்றன. ஆனால் அது மக்களை எச்சரிக்கைப்படுத்த ஒரு நடவடிக்கையாக அமைகிறது.

ஆனால் தமிழக அரசு இதுவே தீர்வு என்பது போல மக்களை ஏமாற்றுவதை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. டெங்குவால், ரத்தத்தில் அணுக்கள் ( பிளேட்லெஸ்) எண்ணிக்கை குறைகிறது. இதனால் ரத்தத்தின் உறையும் தன்மை குறைகிறது. இந்த நேரத்தில் மற்ற பாதிப்புகள் வரும் போது, ரத்தம் கசிந்து நிலைமை சீர் குலைகிறது.

இதற்கான வைத்திய முறை, ரத்தத்தில் பிளேட்லெஸ் குறையாமல் பார்த்துக் கொள்வது தான். ரத்தம் ஏற்றி சரி செய்யப்படுகிறது. ஆனால் அரசு இந்த மருத்துவ விபரங்களை வெளியில் சொல்லாமல் ஏமாற்றுகிறது.

முதலில் டெங்கு என்ற விஷயத்தை சொல்லாமல், மர்மக் காய்ச்சல் என்றார்கள். பிறகு, வைரஸ் ஜுரம் என்றார்கள். இப்போ தான், டெங்கு என முனகுகிறார்கள். ஆனால் ஒளித்து மறைக்கும் முயற்சியில் தான் இருக்கிறார்கள்.

அரசாங்கம் டெங்கு குறித்த பிரச்சினைகளை முதலில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அடுத்து உண்மையான மருத்துவ முறைகளை சொல்ல வேண்டும்.