திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்) விவரம் :
பாபநாசம் அணை 43,
பாபநாசம் கீழ் அணை 13,
சேர்வலாறு அணை 24,
மணிமுத்தாறு அணை 31,
கடனாநதி அணை 25,
ராமநதி அணை 20,
கருப்பாநதி அணை 5,
குண்டாறு அணை 30,
அடவிநயினார் அணை 3,
நம்பியாறு அணையில் அதிகபட்சம் 99,
கொடி முடியாறு அணை 60,
கன்னடியன் அணைக்கட்டு,அம்பாசமுத்திரம் 9.2
ஆய்க்குடி 36
சேரன்மகாதேவி 13
நான்குனேரி 30
ராதாபுரம் 50
பாளையங்கோட்டை 30.4
திருநெல்வேலி 4
தென்காசி 10.4
செங்கோட்டை 37
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கடனாநதி அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த 450 கனஅடி உபரிநீர் கருணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைப் பகுதியில் மழை நீடித்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு 2881.22 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 2692 கனஅடி. ராமநதி அணைக்கு 83 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 32 கனஅடி, வடக்குப் பச்சையாறு அணைக்கு 105.30 கனஅடி, நம்பியாறு அணைக்கு 147 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 160 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாபநாசம் அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 107.45 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 121.36 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 90.25 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 67.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 63.98 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், வடக்குப்பச்சையாறு அணை நீர்மட்டம் ஒரடி உயர்ந்து 29.50 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 1.50 உயர்ந்து 21.29 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 37.00 அடியாகவும் உள்ளது.
இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி ரேத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.