அடையார் முகத்துவாரத்தில் இனப்பெருக்கத்திற்காக வந்த மடவை வகை மீன்கள் கழிவு நீர் அதிகமாகி ஆக்‌ஷிஜன் இல்லாத காரணத்தால் இறந்து கரை ஒதுங்கியுள்ளன என வருத்தத்துடன் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Special Correspondent

கடலை மக்கள் குப்பை தொட்டியாக ஆக்கியதன் விளைவே மீன்கள் செத்து மிதப்பதாகவும் . மாநகர கழிவுகள், அனல் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்கள், ரசாயன தொழிற்சாலை, என எல்லா கழிவுகளையும் கடலில் கொட்டியதால், கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகி உயிரிழக்கின்றன எனக் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் நல்லநீர் கலந்திருப்பதால் கடல்நீரில் உப்பு தண்மை குறைந்ததே அடையார் முகத்துவாரத்தில் மீன்கள் உயிரிழக்க காரணம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

முகத்துவாரத்தை பொறுத்தவரையில் மகப்பேறு மருத்துவமனை என்று கூட சொல்லலாம் அந்த அளவிற்கு மீன் இனவிருத்தி அங்கு இருக்கும்.

நல்ல நீர் அடையார் முகத்துவாரம் வலியாக கடலுக்கு சென்ற காரணத்தினால் உவர் நீரில் முழுமையாக உப்பு குறைந்ததின் காரணமாக மீன்கள் இறப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மீன்கள் சோதனைக்கு எடுத்துச்சென்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரின் நல்ல நீர் கலந்த பேச்சை கேட்டு மீனவர்கள் " இது எதோ தெர்மோகோல் மாட்டார்ப்பா " என்று தலையிலடித்து வண்ணம் கலைந்து சென்றனர்