திருச்சி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஆலங்களில் ஒன்றான சமயபுரம் மாரியம்மன் கோவில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவருகிறது.
இந்த கோவிலின் மேற்கு நுழைவு வாயில், புதிய நந்தவனம், அருள்மிகு அனந்தவள்ளி உடனுறை போஜீஸ்வரர் கோவிலில் கிரிவலப்பாதை வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள், அருள்மிகு உச்சயினி காளியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உயர்மின்கோபுர விளக்குகள் அமைத்திட சுமார் ரூ.22 லட்சம் செலவில், கோவில் நிர்வாகம் சார்பில் டெண்டர் விடப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
உயர்மின்கோபுர விளக்கு அமைக்கும் பணிக்காக டெண்டர் விடப்படப்பட்ட நிலையில், திருச்சி வயலூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஒப்பந்ததாரர் டெண்டர் கோரியுள்ளார்.
இந்நிலையில், மணிகண்டனை சந்தித்த கோவில் செயல் அலுவலர் குமரதுரை, எம்.எல்.ஏ. பரமேஸ்வரி சொன்னால்தான் பணி வழங்க முடியும் என்றும், அவரை பார்த்து விட்டு வாருங்கள் என கூறியதாகவும் அதற்கு தான் , கோவில் நிதியில் செய்யும் வேலைக்கு நான் ஏன் எம்.எல்.ஏவை பார்க்கணும் எனக் சொல்லிய மணிகண்டன் அதற்கு தான் மறுத்ததால், டெண்டரை ரத்து செய்துவிட்டார்கள் என்றும்,
இறுதியாக 30 சதவீதம் கமிஷன் கேட்கிறார்கள். இதுகுறித்து விசாரணை நடத்தி, எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகன் மீதும், இணை ஆணையர் குமரகுரு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியுள்ள மணிகண்டன் அதிமுக எம்.எல்.ஏ.வுடனான தொலைபேசி ஆடியோ உரையாடல் பின்வரு ஆதாரத்தையும் ஒப்பந்ததாரர் மணிகண்டன் வெளியிட்டுள்ளார்.
எம்.எல்.ஏ பரமேஸ்வரி:நான் மண்ணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ பேசுறேன். கோவில் எலெக்ட்ரிகல் ஒர்க் டெண்டர் கேட்டிருந்தீங்களா?
ஒப்பந்ததாரர் மணிகண்டன்: ஆமாம் மேடம்.
எம்.எல்.ஏ பரமேஸ்வரி: இது காம்ப்ரமைசர் டெண்டர்தாங்க. ஓபன் டெண்டர்னா எல்லோரும் எடுக்கலாம். இது நாங்களா பார்த்து முடிவு பண்ணுவது. நீங்கள் டெண்டர் எடுக்கணும் என்றால் என்னை வந்து பார்க்கணும் இல்லையா..? நான் தொகுதி எம்.எல்.ஏ “
ஒப்பந்ததாரர் மணிகண்டன்: மேடம்! நான் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர். அதுவும் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர். அதனால் டெண்டர் எடுக்க எங்க வேண்டுமானால் டெண்டருக்கு அப்ளிகேஷன் போடுவேன். எதுக்கு உங்களைப் பார்க்கணும்"
எம்.எல்.ஏ பரமேஸ்வரி:டெண்டர் எடுக்கணும் என்றால் முன்னாடியே வந்து சொல்லியிருக்கனும்னு இல்லைங்க. உங்களை ஏன் நேரில் பார்க்கணும் என நீங்கள் பேசுவது எல்லாம் சரியாகாது
ஒப்பந்ததாரர் மணிகண்டன்: இது சாதாரண எலெக்ட்ரிகல் ஒர்க் மேடம், இதுல யாரும் தலையிடமாட்டார்கள். இருக்கிற 5 வேலையில் 2 வேலை நான் எடுக்கிறேன். மற்றதை நீங்க நினைக்கிறவர்களுக்கு கொடுங்க. என்ன பார்மாலிட்டியோ அதை வாங்கிக்கொள்ளுங்கள். சில நாள்களுக்கு முன்னால், டெக்னிக்கல் எஜூகேஸனல் மினிஸ்டர் அன்பழகன் சாருக்கு கூட நான் வேலைசெய்து கொடுத்தேன். அவர்கள் கூட இதுபோன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள். “
எம்.எல்.ஏ பரமேஸ்வரி: எந்த மினிஸ்டர். யாரை சொல்லுறீங்க.
ஒப்பந்ததாரர் மணிகண்டன்: டெக்னிக்கல் மினிஸ்டர் அன்பழகன் சார்.
எம்.எல்.ஏ பரமேஸ்வரி:இதுக்கெல்லாம் ஏங்க அவங்கள்ட்ட பேசுறீங்க. நேரில் வந்துபாருங்க. நீங்களே டெண்டர் எடுத்துக்கொள்ளுங்கள். மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு வாங்க. எல்லாம் பேசிக்கலாம்".
என அழைத்தபடி துண்டிக்கப்பட்டது அழைப்பு.தற்போது அந்த ஆடியோ உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருவதால் பொதுமக்களிடையே 30% கமிஷன் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.