எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் இணைந்தது இரட்டை கிடைத்தது என எடப்பாடி வலுப்பெற்றே கொண்டே சென்றது தினகரன் தரப்பை கவலையில் ஆழ்த்திய நிலையில் பிஜேபி யில் இருந்து அதிமுகவுக்கு தாவி எம்பி சீட் பெற்ற மைத்ரேயன் மூலமாக எடப்பாடி பழனிச்சாமி - பன்னீர்செல்வம் இடையே பகிரங்க மோதல் வெடித்திருப்பது, தினகரன் அணிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டாயப்படுத்தி இணைப்பு வைத்தால் பிரிந்துதான் செல்ல வேண்டும் என தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்செல்வனின் கருத்து தெரிவித்து உள்ளார் . அவரின் தலைவர் தினகரன் நேரிடையாக கட்டாய திருமணம் இப்படி தான் வெடிக்கும் என்று ஒரு படி மேல சென்று சிரிப்புடன் பேட்டி அளித்துள்ளார்.
21 எம்.எல்.ஏ.க்களை எடப்பாடிக்கு எதிராக திரும்ப வைத்தது போல, மேலும் 20 எம்.எல்.ஏ.க்களையும் தங்களது பக்கம் இழுக்க தினகரன் காய்நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த வியூகத்திற்கு வலுசேர்க்கும் வகையில் எடப்பாடி-பன்னீர் இடையிலான வெடித்துள்ள மோதல் அமைந்துள்ளது.
மேலும் எடப்பாடி மீது ஓ.பி.எஸ்.க்கு உரிய மரியாதை தரவில்லை என பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் கருத்து தெரிவித்து வரும் மைத்ரேயன் ஏற்கனவே ஆளுநராக இருந்த வித்யாசாகர்ராவுடன் நெருக்கமாக இருந்தவர். இப்பொழுது ஆளுநராக வந்திருக்கும் பன்வாரிலாலுடனும் நெருக்கமாக இருக்கிறார். இன்று தமிழிசை சங்கம் நடத்தும் விழாவுக்காக அழைப்பிதழ் கொடுக்க ஏ.சி.முத்தையாவுடன் சென்று ஆளுநரை சந்தித்தார்.
ஏற்கனவே தற்பொழுது வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக இருந்த பி.வி.சோமநாதன், தலைமைச் செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதன், கவர்னர் செயலாளராக நியமிக்கப்பட இருக்கும் ராஜகோபால் ஐஏஎஸ் ஆகியோர் மைத்ரேயனுக்கு நெருக்கமானவர்களே.
இந்த நால்வரோடு, ஐவராக இருக்கும் கவர்னரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள். ஏற்கனவே எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் நரேந்திர மோடி, கவர்னர் மூலமாக ஆட்சியை கலைப்பாரேயானால் ஒரே சமூகப் பின்னணியைக் கொண்ட இந்த நால்வரும் தமிழக ஆட்சியை தீர்மானிக்கும் நபர்களாக மாறுவார்கள்.
எடப்பாடி அரசுக்கு சாவு மணி அடிக்க திட்டம் தீட்டுவதன் தொடர்ச்சியாகத்தான் ஆளுநருடன் நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். இவர் மத்தியில் ஆளும் பாஜகவின் எண்ணங்களை பிரதிபலிக்கிறார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.கே.நகர் தேர்தலும் அதை தொடர்ந்து அரங்கேறும் நிகழ்வுகளுமே எடப்பாடி முதல்வர் ஆட்சியை தக்கவைப்பாரா என்பதை தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.