தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ராஜா ரெட்டி. இவருடைய மனைவி வாணி ஆவார். இவர்களுக்கு இரட்டையர்களான ராகேஷ் ரெட்டி, ராக மெளனிகா என்ற இரண்டு மகன், மகள் உள்ளனர். இரண்டு பேருமே செம்ஞ்சேரியில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதலாமாண்டு படித்து வருகின்றனர்.
நேற்று நடந்த தேர்வில் சக மாணவியைப் பார்த்து எழுதியதற்காக பேரசிரியரால் கண்டிக்கப்பட்டார். மேலும், அவரை ஆபாசமாகப் பேசி தேர்வறையை விட்டு வெளியேற்றியதாகவும் மாணவர்கள் தரப்பில் சொல்லப்பட்டுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி ராகமோனிகா தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில் மாணவியுன் உடல் ராய்பேட்டை மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாணவியின் தந்தை,
"என் மகள் தற்கொலைக்கு நிர்வாகமே காரணம். என் மகள் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளுக்கு உடல் நிலை சரியில்லை என்று எனது மகன் தான் போன் செய்து கூறினார். கல்லூரி நிர்வாகத்திடமிருந்து முறையான தகவல் வரவில்லை. இன்னொரு மாணவருக்கு இது போன்ற அசம்பாவிதம் நடைபெறக்கூடாது. எனது மகள் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என ராஜா ரெட்டி தெரிவித்தார்.
இறந்த மாணவியின் சகோதரர் ராகேஷ் ரெட்டி கூறுகையில்,
"எனது சகோதரி தற்கொலை செய்வதற்கு முன்பாக எனக்கு செல்போனில் தகவல் அனுப்பினார். நான் அதிர்ச்சி அடைந்து அவருடைய விடுதிக்கு ஒடினேன். ஆனால் அங்குள்ள காவலாளி என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. அரை மணி நேரமாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். பின் உள்ளே சென்று பார்க்கும்போது சகோதரி தூக்கில் தொங்கியபடி கிடந்தார். முன்னரே உள்ளே அனுமதித்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என ராகேஷ் ரெட்டி கூறினார்.
இதையடுத்து, மாணவியின் தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் எனக்கூறி விடுதி வளாகத்திற்குள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், விடுதி வளாகத்திற்குள்ளேயே மாணவர்கள் தீயிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் தற்கொலை என்ற அடிப்படையில் முதற்கட்டமாக வழக்கு பதிவு செய்துள்ளனர். மாணவியின் தந்தை கொடுத்த புகாரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தவும் அடுத்த கட்டமாக போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனால் பலத்த போலிஸ் பாதுகாப்பானது பல்கலைக்கழகத்துக்கு போடப்பட்டுள்ளது.
நூலகம் உள்ளிட்ட முக்கிய அறைகள் தீயில் இட்டு மாணவர்கள் கோபத்துடன் கொளுத்தி சத்தியபாமா பல்கலைகழகம் வரலாறு காணாத வன்முறை காரணமாக பல்கலைக்கழகத்துக்கு 2018 ஜனவரி 2 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.